மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் கொரோனா டெஸ்ட்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் கொரோனா 'டெஸ்ட்'

Added : செப் 15, 2021
Share
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், 9 முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகள், கடந்த, 1ம் தேதி துவங்கின. தற்போது, கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பள்ளிக்கு வரும், மாணவ, மாணவியருக்கு, தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது.கடந்த வாரத்தில்,

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், 9 முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகள், கடந்த, 1ம் தேதி துவங்கின. தற்போது, கொரோனா முன்னெச்சரிக்கையுடன் பள்ளிக்கு வரும், மாணவ, மாணவியருக்கு, தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது.கடந்த வாரத்தில், கோவில்பாளையம் - காளியண்ணன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இரு மாணவிகள் தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து, கிணத்துக்கடவு ஒன்றியத்தில் செயல்படும், அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம், 150 மாணவர்கள், 10 ஆசிரியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முத்துக்கவுண்டனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 110 மாணவர்கள், 18 ஆசிரியர்களுக்கும்; வடசித்துார் பள்ளியில், 305 மாணவர்கள், 36 ஆசிரியர்களுக்கும்; நெகமம் பள்ளியில், 220 பேருக்கும்; ஆண்டிபாளையம் பள்ளியில் 39 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில், யாருக்கும் தொற்று பரவல் இல்லை என்பது உறுதியானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X