சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொந்த வீட்டில் நகை திருட்டு: நாடகமாடிய இருவர் கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அருகே, சொந்த வீட்டிலேயே திருடி, நாடகமாடிய மனைவி மற்றும் அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.உடுமலை அருகேயுள்ள தேவனுார்புதுார் எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த கந்தராசு, 33. தேங்காய் வியாபாரி. அவரது மனைவி, லோகேஸ்வரி, 32.கடந்த, 11ம் தேதி, சினிமாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டதாகவும், அடையாளம் தெரியாத நபர், 11 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டதாகவும், நேற்று
 சொந்த வீட்டில் நகை திருட்டு: நாடகமாடிய இருவர் கைது

உடுமலை:உடுமலை அருகே, சொந்த வீட்டிலேயே திருடி, நாடகமாடிய மனைவி மற்றும் அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.உடுமலை அருகேயுள்ள தேவனுார்புதுார் எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த கந்தராசு, 33. தேங்காய் வியாபாரி. அவரது மனைவி, லோகேஸ்வரி, 32.கடந்த, 11ம் தேதி, சினிமாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டதாகவும், அடையாளம் தெரியாத நபர், 11 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டதாகவும், நேற்று பீரோவை திறந்து பார்த்த போது திருட்டு போனது தெரிந்ததாக, தளி போலீசில் புகார் கொடுத்தார்.

இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், கந்தராசு மனைவி லோகேஸ்வரியே, தனது தம்பி, அரவிந்த்குமார்,26, மூலம் திருடியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 1.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகையை மீட்டனர்.போலீசார் கூறியதாவது:வீட்டில் நகை திருட்டு, புகாரை தொடர்ந்து வீட்டில் ஆய்வு செய்யப்பட்டதில், கதவு உடைப்பு, பீரோ உடைப்பு போன்ற சம்பவங்கள் தெரியவில்லை.

இதனையடுத்து, குடும்ப நபர்களே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம், என்ற கோணத்தில் விசாரணை துவங்கியது.சம்பவம் நடந்த சமயத்தில் பேசப்பட்ட, மொபைல் போன் கால்கள் அடிப்படையில் விசாரணை செய்ததில், குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், லோகேஸ்வரி, தனது தம்பியை வைத்து திருடியதை ஒப்புக்கொண்டார்.கடந்த, 11ம் தேதி, சினிமாவுக்கு சென்ற லோகேஸ்வரி, தனது தம்பியை அழைத்து, வீட்டில் யாரும் இல்லை; நகைகளை எடுத்து, அவரது வீட்டில் வைத்திருக்குமாறு தெரிவித்துள்ளார். பின்னர், கணவரிடம், நகை திருடப்பட்டதாக கூறி நாடகமாடியுள்ளார்.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X