போலீஸ் செய்திகள்: பைக் மோதி முதியவர் பலி

Added : செப் 15, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி அருகே, பூசாரிப்பட்டியை சேர்ந்த விவசாயி மயில்சாமி,65. இவர், பூசாரிப்பட்டி பெரிய கால்வாய் அருகே நடந்து சென்றார். அப்போது, இவருக்கு பின்னால், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த பைக், அவர் மீது மோதியது. படுகாயமடைந்த மயில்சாமி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். பைக் ஓட்டி வந்த, உடுமலை கொங்கல்நகரத்தை சேர்ந்த பஞ்சலிங்கத்திடம்,

பொள்ளாச்சி அருகே, பூசாரிப்பட்டியை சேர்ந்த விவசாயி மயில்சாமி,65. இவர், பூசாரிப்பட்டி பெரிய கால்வாய் அருகே நடந்து சென்றார். அப்போது, இவருக்கு பின்னால், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த பைக், அவர் மீது மோதியது. படுகாயமடைந்த மயில்சாமி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். பைக் ஓட்டி வந்த, உடுமலை கொங்கல்நகரத்தை சேர்ந்த பஞ்சலிங்கத்திடம், கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சூதாட்டம்; 9 பேர் கைது

பொள்ளாச்சி, மாமரத்துப்பட்டி - ஊஞ்சவேலாம்பட்டி விநாயகர் கோவில் பள்ளம் அருகே, பணம் வைத்து சூதாடுவதாக கோமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பணம் வைத்து சூதாடிய, தென்குமாரபாளையம் மாமரத்துப்பட்டியை சேர்ந்த சுப்ரமணி,65, குமார்,35, ஈஸ்வரசாமி,50, சபரி,43, ராமு,47, மனியன்,55, சவரணகுமார்,42, கனகசபாபதி,40, தண்டபானி,40, ஆகிய ஒன்பது பேரை கைது செய்தனர். மேலும், 2,720 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X