பொது செய்தி

தமிழ்நாடு

குமுறும் போடி சுப்புராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர்

Added : செப் 15, 2021
Share
Advertisement
போடி : போடி சுப்புராஜ் நகரில் வீடுகளுக்கு 60 ஆண்டாக பட்டா பெற முடியாமல் தவிக்கின்றனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை, பராமரிப்பு இல்லாத பூங்காவால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி நகராட்சி 32 வது வார்டு சுப்புராஜ் நகரில் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள ரேஷன்கடையை நீண்ட தொலைவில் மாற்றியதால் பொருட்கள் பெற முடியாமல், குடிநீர்

போடி : போடி சுப்புராஜ் நகரில் வீடுகளுக்கு 60 ஆண்டாக பட்டா பெற முடியாமல் தவிக்கின்றனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை, பராமரிப்பு இல்லாத பூங்காவால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி நகராட்சி 32 வது வார்டு சுப்புராஜ் நகரில் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள ரேஷன்கடையை நீண்ட தொலைவில் மாற்றியதால் பொருட்கள் பெற முடியாமல், குடிநீர் தட்டுப்பாட்டில் சிரமம் அடைவதாக சுப்புராஜ் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் குமுறுகின்றனர்.நலச்சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர்களாக அசோக்குமார், செல்வராஜ், மனோகரன், ராஜ்மோகன், சுகுமாறன், மாரிமுத்து, கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:நகராட்சி 32 வது வார்டு சுப்புராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் 13 தெருக்கள் உள்ளன. இங்கு குடியிருப்போர்களுக்கு கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலம் 60 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு மனை இடம் வாங்கப்பட்டது.

குடியிருப்போர்களுக்கு தற்போது வரை மனை பட்டா வழங்க வில்லை. பட்டா கோரி நகராட்சி, வருவாயிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வங்கி கடன் பெற முடியாமலும் பத்திரபதிவு செய்ய முடியாமல்சிரமம் அடைகிறோம்.ரேஷன் கடை தேவைசுப்புராஜ் நகர் 9 வது தெருவில் இருந்த ரேஷன் கடையை 33 வது வார்டு புதுக்காலனிக்கு சில மாதங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. இப்பகுதி மக்கள் நீண்ட துாரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற முடியவில்லை. இதை பயன்படுத்தி சில நாட்களில் பொருட்கள் பெறாமலே வாங்கியதாக அலைபேசிக்கு தகவல் வருகிறது. இப்பகுதியிலே ரேஷன் கடை அமைக்க வேண்டும்.நகராட்சி சோனைமுத்து பூங்காவை குடியிருப்போர் நலச்சங்கம் பராமரித்தோம். தற்போது வஞ்சி ஓடையில் சிறுபாலம், தடுப்புச்சுவர் கட்டுவதற்கு கட்டுமான பொருட்கள் வைக்கும் கோடவுனாக பூங்காவை பயன்படுத்துகின்றனர்.

அருகே குப்பைகள் கொட்டும் இடமாகவும் நகராட்சி பயன்படுத்துகிறது. பூங்காவிற்கு செல்ல முடியாமல் முதியோர், சிறுவர்கள் சிரமம் அடைகின்றனர்.வீணாகும் குடிநீர்நகராட்சி ஒரு நாள் விட்டு ஒரு நாள்குடிநீர் ஒரு மணிநேரம் அதிகாலையில் சப்ளை செய்யப்படுகிறது. இதில் சிரமம் ஏற்படுகிறது. பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நகராட்சி விளையாட்டு மைதானத்தில் குடிமகன்கள் மது குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து செல்கின்றனர்.

இதனால் நடை பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. இளைஞர்கள் விளையாட முடியாமல் சிரமப்படுகின்றனர். 9 வது தெரு, மெயின் ரோட்டில் கீழே விழும் நிலையில் மரம் சாய்ந்துஉள்ளது. அருகே மின்கம்பம், குடியிருப்புகள் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியதுள்ளது.வீட்டுமனை பட்டா வழங்கவும், ரேஷன் கடை, பூங்கா, விளையாட்டு மைதானம் பராமரிப்பு, தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய நகராட்சி, வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X