கிராம உதவியாளர்கள் போராட்டம்: தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராம உதவியாளர்கள் போராட்டம்: தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

Added : செப் 15, 2021
Share
உடுமலை:உடுமலை தாலுகா அலுவலகத்தில், கிராம நிர்வாக உதவியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடுமலை தாலுகா, வாளவாடி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றியவர் திலீப். அவர் பல்வேறு காரணங்களால், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், உரிய காரணங்கள் நிரூபிக்கப்படவில்லை; பிழைப்பூதியமும் வழங்கவில்லை.எனவே, உடனே பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி,
 கிராம உதவியாளர்கள் போராட்டம்: தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு

உடுமலை:உடுமலை தாலுகா அலுவலகத்தில், கிராம நிர்வாக உதவியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடுமலை தாலுகா, வாளவாடி வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றியவர் திலீப். அவர் பல்வேறு காரணங்களால், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், உரிய காரணங்கள் நிரூபிக்கப்படவில்லை; பிழைப்பூதியமும் வழங்கவில்லை.எனவே, உடனே பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், திலீப் மற்றும் கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகளும் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது: அரசு ஊழியர் சங்க நிர்வாகியான அவர் மீது, கடந்த ஆட்சியில் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில், அவதுாறு பரப்பியதாகவும், மணல், கிராவல் மண் கடத்தல், குடிமராமத்து திட்ட முறைகேடு தெரிவித்ததால், ஒரு தரப்பினருக்கு சாதகமாக எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாமல், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். ஒரு ஆண்டு, 4 மாதம், பிழைப்பூதியமும் வழங்காமல், மீண்டும் பணி வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தனர்.இதனையடுத்து, தாசில்தார் ராமலிங்கம் தலைமையில் பேச்சு நடந்தது. இதில், பிழைப்பூதியம் விடுவிப்பது, பணி வழங்குவது என உறுதியளிக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X