பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கு நோக்கி மரக்கன்று நடும் பணிகள் தீவிரம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
உடுமலை:'வனத்துக்குள் திருப்பூர்--7' திட்டத்தில், உடுமலை அருகே மரக்கன்றுகள் நடப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 10.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது; ஏழாவது திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 50 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில், பருவ மழை தீவிரமடைந்துள்ளதால்,
 இலக்கு நோக்கி மரக்கன்று  நடும் பணிகள் தீவிரம்

உடுமலை:'வனத்துக்குள் திருப்பூர்--7' திட்டத்தில், உடுமலை அருகே மரக்கன்றுகள் நடப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 10.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது; ஏழாவது திட்டத்தில், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 50 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில், பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், இக்காலத்தில் மரக்கன்றுகளை நடுவதால், வேகமாக வளர்ச்சி பெறும்; கோடை காலத்தில் வறட்சியை தாங்கி வளரும் தன்மையை பெறுகிறது, என்பதால், மரக்கன்றுகள் நடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.நேற்று, உடுமலை அருகேயுள்ள ஆண்டியகவுண்டனுார் பகுதியிலுள்ள, மானாவாரி நிலத்தில், பழமரச்சாகுபடி திட்டமாகவும், பசுமை பரப்பு அதிகரிப்பு, பழ மரங்களால் வருவாய் என்ற அடிப்படையில், விவசாயி செந்திலுக்கு சொந்தமான நிலத்தில், கொய்யா, 2,150 மரக்கன்றுகள் மற்றும் மகா கனி, கடுக்காய் என, 2,216 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X