பொது செய்தி

தமிழ்நாடு

முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அரசு கலைக் கல்லுாரியில், முதுநிலைப் பாடப்பிரிவில், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், பொருளியல், புள்ளியியல், சுற்றுலாவியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.இப்பாடப்பிரிவில், 265 இடங்கள் உள்ளன. அவ்வகையில், 2021-22ம் கல்வியாண்டின், முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, வரும், 17ல்,

உடுமலை:உடுமலை அரசு கலைக் கல்லுாரியில், முதுநிலைப் பாடப்பிரிவில், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், பொருளியல், புள்ளியியல், சுற்றுலாவியல், இயற்பியல், வேதியியல், கணிதவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.இப்பாடப்பிரிவில், 265 இடங்கள் உள்ளன. அவ்வகையில், 2021-22ம் கல்வியாண்டின், முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, வரும், 17ல், நடக்கிறது. கலந்து கொள்ள விரும்புவோர், அன்றைய தினம் காலை, 9:00 மணிக்கு, உரிய சான்றிதழ்களுடன் கல்லுாரிக்கு வருகை புரிய வேண்டும்.கல்லுாரி முதல்வர் கல்யாணி கூறியதாவது:இளநிலை பாடப் பிரிவுகளில், 864 இடங்கள் உள்ளன. அதற்கான கலந்தாய்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 801 இடங்களுக்கு சேர்க்கை நடந்துள்ளது. இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதேபோல், வணிகவியல் பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, பிளஸ் 2 வகுப்பில் தொழிற்கல்விப்பிரிவில் பயின்ற அனைத்து பிரிவு மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாளைக்குள் கல்லுாரியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X