இந்தியா

'குவாட்' மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் மோடி

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். வாஷிங்டனில், வரும் 24ம் தேதி நடக்கும் குவாட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இரு தரப்பு உறவுகள்குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு, கடந்த மார்ச் மாதம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இந்த
 குவாட் மாநாடு, பங்கேற்க அமெரிக்கா   மோடி

புதுடில்லி :இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். வாஷிங்டனில், வரும் 24ம் தேதி நடக்கும் குவாட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.


இரு தரப்பு உறவுகள்



குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு, கடந்த மார்ச் மாதம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்கும் முதல் மாநாடு 24ம் தேதி வாஷிங்டனில் நடக்கிறது.
இது குறித்து நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். குவாட் தலைவர்கள் மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷியிடே சுகாவுடன் அவரும் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளை பாதுகாப்பது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசி பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசப்படும்.
மிக முக்கியமாக, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக பேசுவர். முன்னதாக 23ம் தேதி, மோடி இரு தரப்பு உறவுகள் தொடர் பாக ஜோ பைடனுடன் பேச
உள்ளார்.


latest tamil news



மேலும், ஸ்காட் மோரிசனையும் அவர் சந்தித்து இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேசுவார். பின், நியூயார்க் செல்லும் மோடி, ஐ. நா., பொது சபையில் 25ம் தேதி பேச உள்ளார்.


'ஹவ்டி மோடி'



அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், மோடி அவரை முதல் முறையாக நேரில் சந்தித்து பேச உள்ளார். கடைசியாக, கடந்த 2019 செப்.,ல் அமெரிக்காவுக்கு மோடி சென்றார்.
அப்போது அதிபராக இருந்த டொனால்டு டிரம்புடன், ஹூஸ்டனில் நடந்த, 'ஹவ்டி மோடி' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.கடந்த, ஆறு மாதங்களில் பிரதமர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம்
இதுவாகும். கடந்த மார்ச் மாதம் நடந்த, அண்டை நாடான வங்கதேசத்தின், 50வது ஆண்டு விடுதலை விழாவில் அவர் பங்கேற்றார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E. RAJAVELU - Chennai,இந்தியா
15-செப்-202111:30:18 IST Report Abuse
E. RAJAVELU உலகை சுற்றிப்பார்க்கவே பிரதமரானவர்.
Rate this:
Cancel
murphts law -  ( Posted via: Dinamalar Android App )
15-செப்-202110:26:53 IST Report Abuse
murphts law Hip, Hip, Hurrey, New flight got assignment.
Rate this:
Cancel
Sandru - Chennai,இந்தியா
15-செப்-202109:50:10 IST Report Abuse
Sandru கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம். இதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்கப்பு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X