பொது செய்தி

தமிழ்நாடு

குரைக்கும் தெருநாய்கள் கொட்டம்; குறைவில்லாத டாஸ்மாக் கூட்டம் மிரளும் ராம்நகர் மக்கள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் மதுபான கடையை அகற்ற வேண்டும். ராம்நகர் பகுதியில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்' என, ரவுண்ட் ரோடு ராம்நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர்.இக்குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜசேகரன், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது: மாநகராட்சி 16வது
 குரைக்கும் தெருநாய்கள் கொட்டம்; குறைவில்லாத டாஸ்மாக் கூட்டம்   மிரளும் ராம்நகர் மக்கள்


திண்டுக்கல் : 'திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் மதுபான கடையை அகற்ற வேண்டும். ராம்நகர் பகுதியில் தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்' என, ரவுண்ட் ரோடு ராம்நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இக்குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜசேகரன், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது: மாநகராட்சி 16வது வார்டின் ஒரு பகுதி ரவுண்ட் ரோடு ராம் நகர். இங்கு 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மத நல்லிணக்கத்தில் மற்ற வார்டுகளுக்கு முன் மாதிரியாக விளங்குகிறோம். ராம்நகர் குடியிருப்போர் சார்பில் ஏராளமான மரங்கள் நட்டு இங்கு பசுமை சூழலை ஏற்படுத்தியுள்ளோம். இப்பகுதியின் முக்கிய பிரச்னை தெருநாய்களின் தொல்லைதான். தெருவுக்கு குறைந்தது 10 நாய்கள் உள்ளன. நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை மிரட்டி துரத்துகின்றன. இரவில் இன்னும் ஒரு படி மேலே போய் கடிக்கவும் செய்கின்றன. மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இதுமட்டுமின்றி ரவுண்ட் ரோட்டில் உள்ள மதுபான கடையால் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. பள்ளிகளின் அருகேயுள்ள மதுக்கடைகள் அகற்றப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி உடனே அகற்ற வேண்டும். துாய்மை பணியாளர்கள் தினமும் வீடுகளிலும், தெருக்களில் கொட்டும் குப்பையையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜிக்கா குடிநீர் திட்டத்திற்காக தோண்டிய ரோடுகளை சீரமைக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இப்பகுதியின் 90 சதவீத குடியிருப்புகளில் பாதாள சாக்கடை இணைப்பு பெற்றுள்ளனர். மீதமுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கி, சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்குவதை தடுத்து சுகாதாரம் காக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X