தமிழ்நாடு

மஞ்சளாறு அணை 100வது நாளாக 55 அடி உயர்வு

Added : செப் 15, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை 13 ஆண்டுகளுக்கு பின் 100 வது நாளாக ஒரே அளவாக நீர் மட்டம் 55 அடியாக உள்ளது.அணை மொத்த உயரம் 57 அடி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து இருக்கும். ஜூன் 4ல், 55 அடியாக இருந்தது.(55 அடி மட்டும் நீர் தேக்க முடியும்) அதன் பின் கூடுதலாக வந்த நீர் மதகு வழியாக 14 நாட்கள்
 மஞ்சளாறு அணை 100வது நாளாக 55 அடி உயர்வு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை 13 ஆண்டுகளுக்கு பின் 100 வது நாளாக ஒரே அளவாக நீர் மட்டம் 55 அடியாக உள்ளது.

அணை மொத்த உயரம் 57 அடி. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து இருக்கும். ஜூன் 4ல், 55 அடியாக இருந்தது.(55 அடி மட்டும் நீர் தேக்க முடியும்) அதன் பின் கூடுதலாக வந்த நீர் மதகு வழியாக 14 நாட்கள் வெளியேற்றப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பிறகு செப் 14ல், 100 வது நாளாக அணையில் 55 அடி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் 435.32 மி.க. அடி நீர் இருப்பு உள்ளது. வரத்து, வெளியேற்றம் இல்லை. இந்த அணை நீரால் தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன பயன்பெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X