பசுவதை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுவதை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : செப் 15, 2021
Share
தேனி : காளை கன்றுகள் விற்பனை செய்வதை தடுக்க பசுவதை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் முருகன் கோரியுள்ளார்.அவரது அறிக்கையில், ''மாவட்டத்தில் இளங்காளை கன்றுகள் அதிகளவில் வளர்கின்றன. இந்த கன்றுகள் அடிமாட்டுக்காக விவசாயிகளால் விற்கப்படுகின்றன. தேனி ஒன்றிய பகுதி களில் சமீபத்தில் 52 காளை கன்றுகள் விற்பனையாகி உள்ளன.

தேனி : காளை கன்றுகள் விற்பனை செய்வதை தடுக்க பசுவதை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் முருகன் கோரியுள்ளார்.

அவரது அறிக்கையில், ''மாவட்டத்தில் இளங்காளை கன்றுகள் அதிகளவில் வளர்கின்றன. இந்த கன்றுகள் அடிமாட்டுக்காக விவசாயிகளால் விற்கப்படுகின்றன. தேனி ஒன்றிய பகுதி களில் சமீபத்தில் 52 காளை கன்றுகள் விற்பனையாகி உள்ளன. இவற்றை தடுக்க கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களை பசுவதை தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X