தமிழ்நாடு

தேங்காய் விலை வீழ்ச்சி

Added : செப் 15, 2021
Share
Advertisement
தேனி : தேங்காய் கிலோ ரூ.10க்கு விற்பனையாவதால், கொப்பரை தயாரிப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், சின்னமனுார், தேவாரம் பகுதிகளில் தென்னை அதிகளவில் சாகுபடியாகிறது. 15 நாட்களுக்கு முன் ஒரு டன் (ஆயிரம் கிலோ) ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு டன் ரூ.26 ஆயிரம் ஆக விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.10க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள்,
 தேங்காய் விலை வீழ்ச்சி

தேனி : தேங்காய் கிலோ ரூ.10க்கு விற்பனையாவதால், கொப்பரை தயாரிப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், சின்னமனுார், தேவாரம் பகுதிகளில் தென்னை அதிகளவில் சாகுபடியாகிறது. 15 நாட்களுக்கு முன் ஒரு டன் (ஆயிரம் கிலோ) ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு டன் ரூ.26 ஆயிரம் ஆக விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.10க்கு விற்பனையாகிறது.

இதனால் விவசாயிகள், வியாபாரிகள் தேங்காய்களை உடைத்து கொப்பரையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.பள்ளபட்டி வியாபாரி சந்திரசேகரன் கூறியதாவது: ''கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் பாதித்த நிலையில் தற்போது தேங்காய்க்கு போதிய விலை கிடைக்க வில்லை. இதனால் தேங்காய்களை உடைத்து, கொப்பரைக்கு காயவைக்கும் பணிகள் நடக்கிறது. கொப்பரை கிலோ ரூ.80க்கு பெறுகின்றனர்.'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X