பொது செய்தி

தமிழ்நாடு

டாப் - 10 பட்டியலில் கர்நாடகா மாணவர்

Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின், 'டாப் - 10' பட்டியலில், கர்நாடகாவில் வசிக்கும் மாணவர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், மொத்தம் 13 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் பிற

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின், 'டாப் - 10' பட்டியலில், கர்நாடகாவில் வசிக்கும் மாணவர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், 200க்கு 200 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், மொத்தம் 13 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் பிற மாநில பாட திட்ட மாணவர்கள்.திருச்சி நித்யஸ்ரீ, சாரதிவாசன், சேலம் சர்வஜித் விசாகன், ஆரணி ஸ்ரீநிதி, திருநெல்வேலி விக்னேஷ், புதுக்கோட்டை உமா ஸ்வேதா, ஊட்டி சுபஸ்ரீ, சென்னை அத்திப்பட்டு ஹேமந்த், கோவை அஸ்வந்த் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கர்நாடகா மாணவரான பெங்களூரு சஞ்சய்குமாரும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழக அரசின் விதிகளின் படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழக மாணவர்கள் மட்டுமே பங்கேற்க தகுதி உள்ளது. ஆனால், கர்நாடகா முகவரியை கொண்ட மாணவர் எப்படி டாப் - 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் சஞ்சய்குமார், கர்நாடகாவின் ஹலசூரு என்ற ஊரில் வசித்து வருகிறார். அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால், கர்நாடகாவில் வசித்து அங்கேயே படித்தாலும், அவருக்கு தமிழக கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
15-செப்-202112:33:28 IST Report Abuse
Dinesh Pandian கர்நாடக மாநிலத்து பையனும் தமிழன் தான் என்று சீமான் சொல்லக்கூடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X