கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு கைதிக்கு நிபந்தனை ஜாமினில் தளர்வு

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஊட்டி:கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜின் நிபந்தனை ஜாமின் உத்தரவில், கோர்ட் தளர்வு அளித்துள்ளது.விசாரணைநீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபர் வாளையார் மனோஜ். கடந்த மாதம் 16ம் தேதி நிபந்தனை ஜாமின் உத்தரவில், 'நீலகிரி அல்லது கோவையை சேர்ந்த நபர்கள் உத்தரவாதம் அளிப்பதுடன், 50 ஆயிரம் ரூபாய்

ஊட்டி:கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜின் நிபந்தனை ஜாமின் உத்தரவில், கோர்ட் தளர்வு அளித்துள்ளது.

விசாரணை

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபர் வாளையார் மனோஜ். கடந்த மாதம் 16ம் தேதி நிபந்தனை ஜாமின் உத்தரவில், 'நீலகிரி அல்லது கோவையை சேர்ந்த நபர்கள் உத்தரவாதம் அளிப்பதுடன், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்து மதிப்பு காட்ட வேண்டும்' என, ஊட்டி கோர்ட் உத்தரவிட்டது. இந்த ஆவணங்களை அவரால் தாக்கல் செய்ய முடியவில்லை. இதனால், குன்னுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

உத்தரவில் தளர்வு கோரி, மனோஜின் வக்கீல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சஞ்சய்பாபா முன் விசாரணைக்கு வந்தது.சொத்து மதிப்புவிசாரணைக்கு பின், மனோஜின் வக்கீல் முனிரத்தினம் கூறுகையில், ''கேரளாவை சேர்ந்த ரத்த உறவுகள் இருவர் உத்தரவாதம், 50 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு காட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். உறவினர்கள் உத்தரவாதம் தர உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X