பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:'இன்ஜினியரிங் கவுன்சிலிங்'கில் தனியார் பள்ளி மாணவர்களை போல, அரசு பள்ளி மாணவர்களும் அதிக, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு, தனியாக தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 ஆயிரத்து 660 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 1,990 மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை போல 170 முதல் 193 வரை கட் - ஆப் மதிப்பெண்

சென்னை:'இன்ஜினியரிங் கவுன்சிலிங்'கில் தனியார் பள்ளி மாணவர்களை போல, அரசு பள்ளி மாணவர்களும் அதிக, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு, தனியாக தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 15 ஆயிரத்து 660 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 1,990 மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களை போல 170 முதல் 193 வரை கட் - ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

'டாப் - 10' பட்டியலில் இடம் பெற்றுள்ள விஸ்வநாதன் என்ற மாணவர், 197.9 கட் - ஆப் மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், சென்னை அனகாபுத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்.சிவகங்கை எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சண்முகவேல், காஞ்சிபுரம் ஏகனாம்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கவிதா ஆகியோர் 197க்கு மேல் கட் - ஆப் பெற்றுள்ளனர்.

நாமக்கல் வெண்ணாந்துர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் தீபகுமார், ஈரோடு வீரப்பன்சத்திரம் எம்.ஆர்.ஜி., பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தர்ஷினி, கன்னியாகுமரி கடயல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாத்திமா பர்வீன், காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜனனி.

சென்னை அனகாபுத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மோனிஷா, ஈரோடு துடுப்பத்தி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மேகா மற்றும் திருவள்ளூர் கன்னிகைபேர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெயபிரபா ஆகியோர், டாப் - 10 பட்டியலில், 194 முதல் 197 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X