அரசியல் செய்தி

தமிழ்நாடு

5 முறை கவுன்சிலிங் அமைச்சர் தகவல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
சென்னை:''இன்ஜினியரிங் இடங்கள் வீணாகாத வகையில், இந்த ஆண்டு முதல், ஐந்து முறை கவுன்சிலிங் நடத்தப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன் கவுன்சிலிங்', இன்று துவங்க உள்ள நிலையில் அவர் அளித்த பேட்டி:இன்ஜி., கவுன்சிலிங் ஆன்லைன் வழியில் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் படித்த 15 ஆயிரத்து, 660

சென்னை:''இன்ஜினியரிங் இடங்கள் வீணாகாத வகையில், இந்த ஆண்டு முதல், ஐந்து முறை கவுன்சிலிங் நடத்தப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன் கவுன்சிலிங்', இன்று துவங்க உள்ள நிலையில் அவர் அளித்த பேட்டி:இன்ஜி., கவுன்சிலிங் ஆன்லைன் வழியில் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் படித்த 15 ஆயிரத்து, 660 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 11 ஆயிரத்து 390 பேருக்கு, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடங்கள் கிடைக்கும்.

கடந்த ஆண்டில் கவுன்சிலிங்கில் இடங்களை பெற்று, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள், மருத்துவம் உள்ளிட்ட வேறு படிப்புகளுக்கு சென்றதால் 700 இடங்கள் அண்ணா பல்கலையில் மாணவர்கள் இல்லாமல் வீணாகின.இந்த நிலை ஏற்படாமல் இருக்க, இந்த ஆண்டு முதல், ஐந்து முறை கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு முறையும் கவுன்சிலிங் முடிந்து இடங்கள் காலியானதும், மீண்டும்கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 461 கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தின. இந்த ஆண்டு 21 கல்லுாரிகள் மூடப்பட்டு விட்டன. அதனால் 440 கல்லுாரிகளே மாணவர்களை சேர்க்க உள்ளன. புதிதாக துவங்கப்பட்டுள்ள 21 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, அடுத்த ஆண்டில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X