சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராம நுாலகரிடம் ரூ.5000 லஞ்சம் மாவட்ட நுாலகர் கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:கிராம நுாலகரிடம் பணி நீட்டிப்பு செய்வதற்காக ரூ.5000 லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்ட நுாலகர் கண்ணனை 55, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் டி.பிளாக் பஸ்ஸ்டாப் அருகில் மாவட்ட மைய நுாலகம் செயல்படுகிறது. இங்குமாவட்ட நுாலக அதிகாரியாக மதுரையை சேர்ந்த கண்ணன் பணியாற்றி வருகிறார். தற்காலிக கிராம நுாலகர்களின் பணி நீட்டிப்பிற்கு லஞ்சம் கேட்பதாகஇவர்

ராமநாதபுரம்:கிராம நுாலகரிடம் பணி நீட்டிப்பு செய்வதற்காக ரூ.5000 லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்ட நுாலகர் கண்ணனை 55, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் டி.பிளாக் பஸ்ஸ்டாப் அருகில் மாவட்ட மைய நுாலகம் செயல்படுகிறது. இங்குமாவட்ட நுாலக அதிகாரியாக மதுரையை சேர்ந்த கண்ணன் பணியாற்றி வருகிறார். தற்காலிக கிராம நுாலகர்களின் பணி நீட்டிப்பிற்கு லஞ்சம் கேட்பதாகஇவர் மீது புகார் எழுந்தது.

உத்தரகோசமங்கை அருகே மல்லல் கிராம நுாலகத்தில் தற்காலிக கிளை நுாலகராக பணியாற்றும் அதே கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான செந்தில்குமார் 34, என்பவரிடம் பணி நீட்டிப்பு செய்வதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., உன்னிகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்.அவர் கூறியபடி முதற்கட்டமாக ரூ.5000 தருவதாக தெரிவித்தார். நேற்று மாலை மாவட்ட நுாலக அலுவலகத்தில் ரசாயனம் தடவப்பட்ட பணத்தை கண்ணனிடம் கொடுத்தார். அதனை வாங்கிய கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X