ஆசிரியர் வீட்டில் 150 பவுன் ரூ.6.5 லட்சம் கொள்ளை * காளையார்கோவிலில் துணிகரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் வீட்டில் 150 பவுன் ரூ.6.5 லட்சம் கொள்ளை * காளையார்கோவிலில் துணிகரம்

Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வசந்த நகரில் ஆசிரியர் சேசுராஜ் 45, வீட்டில் 150 பவுன் நகை ரூ.6.5 லட்சம் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இவர் காளையார்கோவில் அருகே கல்லிவயல் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ஆரோக்கியரோசி வெற்றியூர் பள்ளி ஆசிரியை. இருவரும் பள்ளிக்கு சென்றனர். மீண்டும் மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின் கதவை
 ஆசிரியர் வீட்டில் 150 பவுன்  ரூ.6.5 லட்சம் கொள்ளை * காளையார்கோவிலில் துணிகரம்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வசந்த நகரில் ஆசிரியர் சேசுராஜ் 45, வீட்டில் 150 பவுன் நகை ரூ.6.5 லட்சம் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இவர் காளையார்கோவில் அருகே கல்லிவயல் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ஆரோக்கியரோசி வெற்றியூர் பள்ளி ஆசிரியை.

இருவரும் பள்ளிக்கு சென்றனர். மீண்டும் மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின் கதவை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவில் இருந்த 150 பவுன் நகை, ரூ.6.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

கொள்ளை நடந்த வீட்டில் எஸ்.பி., செந்தில்குமார், டி.எஸ்.பி., பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் பாண்டியன் விசாரித்தனர். விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இக்கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X