அரசியல் செய்தி

தமிழ்நாடு

'2 மாணவர்கள் சாவுக்கு தி.மு.க., தான் பொறுப்பு'

Added : செப் 15, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை:''நீட் தேர்வு பயத்தில்தற்கொலை செய்து கொண்ட இரண்டு மாணவர்கள் சாவுக்கும் தி.மு.க., தான் பொறுப்பேற்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அவர் கூறியதாவது:நீட் தேர்வால் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் கூட சேலம், அரியலுார் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர்

மயிலாடுதுறை:''நீட் தேர்வு பயத்தில்தற்கொலை செய்து கொண்ட இரண்டு மாணவர்கள் சாவுக்கும் தி.மு.க., தான் பொறுப்பேற்க வேண்டும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அவர் கூறியதாவது:நீட் தேர்வால் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் கூட சேலம், அரியலுார் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு முழு காரணம் தி.மு.க., அரசு தான்.

தி.மு.க., அரசு நீட் தேர்வை வைத்து அரசியல் ஆதாயம் செய்து தேடி வருகிறது. இனிவரும் காலங்களில் மாணவர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொள்ளக் கூடாது.தற்போது உயிரை மாய்த்துக் கொண்ட இரண்டு மாணவர்களின் சாவுக்கும் தி.மு.க., அரசு பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வால் ஆந்திராவில் கூலி வேலை செய்யும் தொழிலாளியின் மகன் தேர்வு செய்யப்படுகிறார்.

கடந்த ஆண்டு கூட, நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். நீட் தேர்வு தி.மு.க., அரசுக்கும், தி.மு.க.,வினர் நடத்தும் மருத்துவக் கல்லுாரிக்கும் மட்டுமே எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X