பொது செய்தி

தமிழ்நாடு

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த போராட தயாராகும் அரசு ஊழியர், ஆசிரியர்கள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
வேடசந்துார்,:'தமிழக பட்ஜெட் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும்' வாக்குறுதியை நிறைவேற்றாததால், அரசை கண்டித்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் இணைந்து போராட தயாராகி வருகின்றன.தமிழகத்தில் 1.4.2003 முதல் புதிய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற 22 ஆயிரத்து 893 பணியாளர்களுக்கு 'செட்டில் மென்ட்' முடிக்கப்பட்டதே தவிர,

வேடசந்துார்,:'தமிழக பட்ஜெட் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும்' வாக்குறுதியை நிறைவேற்றாததால், அரசை கண்டித்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் இணைந்து போராட தயாராகி வருகின்றன.

தமிழகத்தில் 1.4.2003 முதல் புதிய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற 22 ஆயிரத்து 893 பணியாளர்களுக்கு 'செட்டில் மென்ட்' முடிக்கப்பட்டதே தவிர, மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்கவில்லை. இதனால் பழைய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் 18ஆண்டுகளாக போராடி வருகின்றன.

இந்நிலையில் சட்டசபையில், நிதியமைச்சர் தியாகராஜன் வெளியிட்ட கொள்கை விளக்க குறிப்பில், 'ஓய்வூதியம்,ஏனைய ஓய்வு கால நன்மைகள்' குறித்து விளக்கப்பட்டது.இதில் 2014ல் அமைத்த வல்லுநர் குழு 2018 ல் அறிக்கை தாக்கல் செய்தது. இன்று வரை அந்த அறிக்கை பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வைப் போலவே, தி.மு.க., ஆட்சியிலும் கூறுகின்றனர். இதனால் அரசு ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: சமீபத்தில் நடந்த மானிய கோரிக்கையில் ஓய்வூதியம் குறித்த எந்த தகவலும் இல்லை. இதனால் மதுரையில் செப்.19ல், பல தொழிற் சங்க தலைவர்களை அழைத்து, மாநிலம் தழுவிய கலந்தாய்வுகூட்டம் நடத்தி, அதில் போராட்ட முடிவுகள் எடுக்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X