பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் அலுவலர் பணியிடம் நிரப்பப்படுமா

Added : செப் 15, 2021
Share
Advertisement
கம்பம்:தமிழகம் முழுவதும் காலியாக உள்ள1200 வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.வேளாண், தோட்டக்கலைத்துறையில் பதவி உயர்வு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படுகிறது. இதில் உதவி வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், வேளாண் அலுவலர், உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குநனர், கூடுதல் இயக்குனர், இயக்குனர் என்ற வரிசையில் பதவிகள்

கம்பம்:தமிழகம் முழுவதும் காலியாக உள்ள1200 வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

வேளாண், தோட்டக்கலைத்துறையில் பதவி உயர்வு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படுகிறது. இதில் உதவி வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், வேளாண் அலுவலர், உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குநனர், கூடுதல் இயக்குனர், இயக்குனர் என்ற வரிசையில் பதவிகள் உள்ளன.

இதில் தோட்டக்கலைத்துறையில் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தற்போது நேரடி நியமனம் உள்ளது. வேளாண் துறையில் இன்னமும் அமல்படுத்தவில்லை. தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேளாண் அலுவலர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணியாற்றுகின்றனர். கடந்தாண்டு அக்டோபரில் 177 வேளாண் அலுவலர்களுக்கு, உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் காலியாக உள்ள வேளாண் அலுவலர்கள் பணியிடங்கள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் வேளாண் அலுவலருக்கான தேர்வு நடத்தி முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X