சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கருப்பாக மாறிய ராமேஸ்வரம் தங்கத்தேர்

Added : செப் 15, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்க தேர் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. காரணம் குறித்து விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.2001ல் ராமேஸ்வரம் கோயிலில் புதிய தங்கரதம் உருவாக்கப்பட்டது. 14 கிலோ தங்கத்தில் 15 அடி உயரத்தில் தேரும், வெள்ளியில்6 குதிரைகள், பிரம்மர் சாரதியாக அமர்ந்த வகையிலும் வடிவமைக்கப்பட்டது. கட்டணம் செலுத்தி 3ம் பிரகாரத்தில் பக்தர்கள் தேர்
 கருப்பாக மாறிய ராமேஸ்வரம் தங்கத்தேர்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்க தேர் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. காரணம் குறித்து விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

2001ல் ராமேஸ்வரம் கோயிலில் புதிய தங்கரதம் உருவாக்கப்பட்டது. 14 கிலோ தங்கத்தில் 15 அடி உயரத்தில் தேரும், வெள்ளியில்6 குதிரைகள், பிரம்மர் சாரதியாக அமர்ந்த வகையிலும் வடிவமைக்கப்பட்டது. கட்டணம் செலுத்தி 3ம் பிரகாரத்தில் பக்தர்கள் தேர் இழுத்தனர். 2006ல் சக்கரம் பழுதானதால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2021 மார்ச்சில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் தங்க ரத ஓட்டம் நடந்தது.

அதன்பின் தேரோட்டம் நடக்காத நிலையில் தற்போது தேர் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. தேருக்கான தங்கத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் பாலீஷ் செய்ய அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி கூறியது: தேர் கருப்பு நிறமாகி மாறி உள்ளதால், கோயிலின் புனிதம் சீரழிகிறது. இதில் உண்மையை பக்தர்களுக்கு தெளிவுபடுத்தி, தேரை புதுப்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-செப்-202116:09:13 IST Report Abuse
Bhaskaran Sivan soththu kulanaasam athigaarikal kudumbam poondatrupogum
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
15-செப்-202115:43:23 IST Report Abuse
THINAKAREN KARAMANI தங்கம் ''தக தக''ன்னு மின்னும் என்று சிறுபிள்ளைக்கூடத் தெரியும். தங்கம் போயி கருப்பாயிருச்சுன்னா இது என்னாங்க அதிசயமா இருக்கு சீக்கிரம் விசாரணையை ஆரம்பியுங்கள்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
15-செப்-202113:48:23 IST Report Abuse
jayvee கலப்படம்.. தங்கம் ஸ்வாகா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X