சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாணியம்பாடி கொலையில் முக்கிய நபர் சிவகாசியில் சரண்

Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிவகாசி:திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் முக்கிய நபராக தேடப்பட்ட இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். மேலும் 6 பேர் தஞ்சையில் சரணடைந்தனர்.வாணியம்பாடியைச்சேர்ந்தவர் வசீம் அக்ரம் 40; மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலராக இருந்தார்.செப்.10 இரவு அவரை காரில் வந்த மர்ம

சிவகாசி:திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலர் வசீம் அக்ரம் கொலை வழக்கில் முக்கிய நபராக தேடப்பட்ட இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

மேலும் 6 பேர் தஞ்சையில் சரணடைந்தனர்.வாணியம்பாடியைச்சேர்ந்தவர் வசீம் அக்ரம் 40; மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலராக இருந்தார்.செப்.10 இரவு அவரை காரில் வந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். கொலை தொடர்பாக கூலிப்படையைச் சேர்ந்த ரவி 23; தில்லிகுமார் 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா வியாபாரியான வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த இம்தியாஸ் தான் காரணம்.கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு வசீம் அக்ரம் தகவல் கொடுத்ததாக எண்ணி கொலை செய்தது தெரியவந்தது.இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின் 19 சத்தியசீலன் 20 வண்டலுார் ஓட்டேரியைச் சேர்ந்த பிரவீன்குமார் 20 முனீஸ்வரன் 20 செல்வகுமார் 21 ஊரப்பாக்கம் அஜய் 21 ஆகியோர் தஞ்சாவூர் ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 3ல் நீதிபதி பாரதி முன் நேற்று சரணடைந்தனர்.

அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.முக்கிய நபராக தேடப்பட்ட இம்தியாஸ் சிவகாசி கோர்ட்டில் நீதிபதி ராஜேஷ்கண்ணன் முன்னிலையில் சரண் அடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
15-செப்-202113:51:04 IST Report Abuse
jayvee நல்ல வேலை.. இதிலும் ஹிந்து முஸ்லீம் என்ற ரீதியில் செய்திகளை கொண்டு செல்லாத RSB மீடியாக்களுக்கு நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X