சிறப்பு டி.ஜி.பி., பாலியல் வழக்கு இன்றும் தொடர்கிறது விசாரணை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறப்பு டி.ஜி.பி., பாலியல் வழக்கு இன்றும் தொடர்கிறது விசாரணை

Added : செப் 15, 2021
Share
விழுப்புரம்:பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி அளித்த புகாரின்படி, சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இது தொடர்பாக, சிறப்பு டி.ஜி.பி., மீதும், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை மிரட்டி, கார் சாவியை பறித்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.,

விழுப்புரம்:பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.

தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி அளித்த புகாரின்படி, சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இது தொடர்பாக, சிறப்பு டி.ஜி.பி., மீதும், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை மிரட்டி, கார் சாவியை பறித்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.

வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணைக்கு, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆஜரானார். சிறப்பு டி.ஜி.பி., ஆஜராகவில்லை. அதற்கான காரணத்தை, அவரது வழக்கறிஞர் வீரமணி மனுவாக தாக்கல் செய்தார்.

'இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராது. இவ்வழக்கை இங்கு விசாரிக்கக் கூடாது' என, முன்பே சிறப்பு டி.ஜி.பி., தரப்பில் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, அரசு தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜரானார்.'இந்த வழக்கை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலேயே விசாரிக்க முகாந்திரம் உள்ளது என, ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது' என்றார். அதற்கான ஐகோர்ட் உத்தரவு நகலையும் சமர்ப்பித்தார்.

''இதன் மீது எதிர் தரப்பு வாதாடுவதற்காக, இவ்வழக்கு விசாரணை மீண்டும் 15ம் தேதியான இன்று நடக்கும்,'' என, நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X