இன்ஜி., கல்லுாரிகளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி| Dinamalar

இன்ஜி., கல்லுாரிகளுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Added : செப் 15, 2021 | |
மதுரை:தனியார் பொறியியல் கல்லுாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.திருச்சியைச் சேர்ந்த கார்த்திக், 2020ல் தாக்கல் செய்த பொதுநல மனு:கொரோனா ஊரடங்கில், தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் 40 சதவீத கல்வி கட்டணம் வசூலிக்க, 2020ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியார் பொறியியல் கல்லுாரிகளின் ஆசிரியர்கள்,

மதுரை:தனியார் பொறியியல் கல்லுாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

திருச்சியைச் சேர்ந்த கார்த்திக், 2020ல் தாக்கல் செய்த பொதுநல மனு:கொரோனா ஊரடங்கில், தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் 40 சதவீத கல்வி கட்டணம் வசூலிக்க, 2020ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியார் பொறியியல் கல்லுாரிகளின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சில மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டது.

கொரோனா காலக்கட்டத்தில், தனியார் பொறியியல் கல்லுாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதுவரை பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனு செய்தார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'இம்மனு 2020ல் தாக்கலானதால் தற்போது காலாவதியாகி விட்டது. வாபஸ் பெறுகிறோம்' என்றார்.நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X