சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கறுப்பு நிறமாக மாறிய ராமேஸ்வரம் தங்கத்தேர்

Added : செப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தங்கத்தேர் திடீரென கறுப்பு நிறத்திற்கு மாறியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவிலில் 2001ல் புதிய தங்கரதம் உருவாக்கப்பட்டது. 14 கிலோ தங்கத்தில் 15 அடி உயரத்தில் தேரும், வெள்ளியில் ஆறு குதிரைகள், பிரம்மர் சாரதியாக அமர்ந்த வகையிலும் வடிவமைக்கப்பட்டது.கட்டணம் செலுத்தி, மூன்றாம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தங்கத்தேர் திடீரென கறுப்பு நிறத்திற்கு மாறியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவிலில் 2001ல் புதிய தங்கரதம் உருவாக்கப்பட்டது. 14 கிலோ தங்கத்தில் 15 அடி உயரத்தில் தேரும், வெள்ளியில் ஆறு குதிரைகள், பிரம்மர் சாரதியாக அமர்ந்த வகையிலும் வடிவமைக்கப்பட்டது.

கட்டணம் செலுத்தி, மூன்றாம் பிரகாரத்தில் பக்தர்கள் தேர் இழுத்தனர். 2006ல் சக்கரம் பழுதானதால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2021 மார்ச்சில் பழுது நீக்கப்பட்டு, மீண்டும் தங்க ரத ஓட்டம் நடந்தது. அதன்பின் தேரோட்டம் நடக்காத நிலையில், தற்போது தேர் திடீரென கறுப்பு நிறத்திற்கு மாறிஉள்ளது. தேருக்கான தங்கத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

ஹிந்து முன்னணியின் ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலர் ராமமூர்த்தி கூறும்போது, ''தேர் கறுப்பு நிறமாக மாறி உள்ளதால், கோவிலின் புனிதம் சீரழிகிறது. இதில் உண்மையை வெளிக் கொணர்ந்து, தேரை புதுப்பிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-செப்-202105:30:19 IST Report Abuse
Mani . V எவனோ தங்கத்தேரை தன்னுடைய வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு போய்விட்டான். ஆமா, உண்மையை வெளிக்கொணர யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? போய்யா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X