மதுரை:தற்காலிகமாக நியமித்த சித்த மருத்துவர்களை பணியில் தொடர அனுமதித்த உத்தரவிற்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடியைச் சேர்ந்த மைவிழி தாக்கல் செய்த மனு:சித்த மருத்துவர் -பி.எஸ்.எம்.எஸ்., படிப்பை 2003ல் முடித்தேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். தனியார் நிறுவனம் மூலம் அயல்பணி அடிப்படையில், 104 சித்த மருத்துவர்கள் 2020ல், தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.வேலைவாய்ப்பக பதிவு மூப்பு, இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை.
இதற்கு எதிரான வழக்கில், இவ்விவகாரம், தற்போது எந்த நிலையில் உள்ளதோ அதே நிலை தொடர வேண்டும். புதிய நியமனம் மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றம், 2020 டிச., 11ல் உத்தரவிட்டது.தனியார் நிறுவனம் மூலம் தேர்வான தற்காலிக மருத்துவர்களை தொடர்ந்து பணிபுரிய அனுமதித்து, 2021 பிப்., 25ல் தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இதில் விதிமீறல் உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. பணியில் தொடர அனுமதித்த உத்தரவிற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, குறிப்பிட்டார். நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தமிழக சுகாதாரத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE