சர்வதேச அளவில் ஆசிரியர் தின விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச அளவில் ஆசிரியர் தின விழா

Added : செப் 15, 2021
Share
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தமிழியல்துறை, அமெரிக்காவில் உள்ள டில்லி கலை இலக்கிய பேரவை, தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி சார்பில் சர்வதேச அளவில் ஆசிரியர் தின விழா இணையவழியில் கொண்டாடப்பட்டது.தமிழியல்துறைத் தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். 'பிள்ளைகளின் வளர்ச்சிக்கு துணை நிற்பது பெற்றோரா - ஆசிரியர்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பேராசிரியர் ராமச்சந்திரன்

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தமிழியல்துறை, அமெரிக்காவில் உள்ள டில்லி கலை இலக்கிய பேரவை, தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி சார்பில் சர்வதேச அளவில் ஆசிரியர் தின விழா இணையவழியில் கொண்டாடப்பட்டது

.தமிழியல்துறைத் தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். 'பிள்ளைகளின் வளர்ச்சிக்கு துணை நிற்பது பெற்றோரா - ஆசிரியர்களா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பேராசிரியர் ராமச்சந்திரன் நடுவராக பங்கேற்றார். ஓமன் நாட்டில் இருந்து பிரியா, அமெரிக்காவில் பிரதீபா, ராஜா, கார்த்திகா ராஜா, மஸ்கட்டில் தருமாம்பாள், இந்தியாவில் ராஜ்குமார் ஆகியோர் பேசினர்.தொலைக்காட்சி நிறுவனர் ஆஸ்டின் கில்டஸ்சன், சிங்கப்பூர் பாடகர் ரக்தாஷ், சர்வதேச அளவிலான கல்வியாளர், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். டில்லி கலை இலக்கிய பேரவை பொதுச் செயலாளர் குமார் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X