தமிழ்நாடு

மதுரை மாவட்டத்திற்கான 2 லட்சம் பனைமர விதைகள் வேளாண்மை துறை, தோட்டக்கலை மூலம் ஏற்பாடு

Added : செப் 15, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் வேளாண்மை துறை மூலம் 2 லட்சம், தோட்டக்கலை துறை மூலம் 8500 பனைமர விதைகள் வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் மாநில மரமான பனைமரம் அழிந்துவரும் நிலையில் உள்ளது. ரோடுகளின் விரிவாக்கத்தின் போது முதலில் பலியாவது ஆண்டாண்டு காலமாக நின்று கொண்டிருந்த பனைமரங்கள். நுனி முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவப் பயனை கொண்டிருந்தாலும் இதன்

மதுரை : மதுரை மாவட்டத்தில் வேளாண்மை துறை மூலம் 2 லட்சம், தோட்டக்கலை துறை மூலம் 8500 பனைமர விதைகள் வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மாநில மரமான பனைமரம் அழிந்துவரும் நிலையில் உள்ளது. ரோடுகளின் விரிவாக்கத்தின் போது முதலில் பலியாவது ஆண்டாண்டு காலமாக நின்று கொண்டிருந்த பனைமரங்கள். நுனி முதல் வேர் வரை அனைத்தும் மருத்துவப் பயனை கொண்டிருந்தாலும் இதன் அருமையை உணராமல் அழிக்கத் தொடங்கிவிட்டோம். தற்போது பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் பனைவிதைகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வகையில் மதுரை மாவட்டத்திற்கு வேளாண்மை துறை மூலம் இரண்டு லட்சம், தோட்டக்கலை துறை மூலம் 8500 பனைமர விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது விதைகளை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. விதைகள் கிடைத்தவுடன் அவை வேளாண்மை, தோட்டக்கலை துறைகள் மூலம் நர்சரியில் நடப்பட்டு நான்கு மாத கன்றுகளாக வளர்க்கப்படும்.வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் கூறுகையில்,''பனைமரம் 15 - 20 ஆண்டுகளில் பலன் தர ஆரம்பித்து 150 - 200 ஆண்டுகள் வரை பயன்தரும்.

இவை மண் அரிப்பை தடுக்கக்கூடியது. ஆறு, குளம், கண்மாய், ஏரிக்கரைகளில் இவற்றை நடவு செய்வதன் மூலம் கரைகளை பலப்படுத்தலாம். விவசாயிகளுக்கு பனைமரக் கன்றுகளாக உற்பத்தி செய்த பின் வழங்குவோம். ஆர்வமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை அணுகி பதிவு செய்யலாம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X