பொது செய்தி

தமிழ்நாடு

குடியிருப்போர் குரல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சதாசிவ நகர், தாசில்நகர் பகுதியில் 15 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.சதாசிவநகர் - தாசில்தார்நகர் மக்கள்நல மன்றம் தலைவர் பொன்னையா, செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் த.சந்திரன், துணைத்தலைவர் ஆறுமுகம், அமைப்புச் செயலாளர் ப.சந்திரன், கவுரவ ஆலோசகர்கள் ராமலிங்கம், ஜெயப்பிரகாசம், ஜவஹர்அலி கூறியதாவது:மாநகராட்சியுடன் இணைந்த
குடியிருப்போர் குரல்

மதுரை : மதுரை மாநகராட்சிக்குட்பட்ட சதாசிவ நகர், தாசில்நகர் பகுதியில் 15 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

சதாசிவநகர் - தாசில்தார்நகர் மக்கள்நல மன்றம் தலைவர் பொன்னையா, செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் த.சந்திரன், துணைத்தலைவர் ஆறுமுகம், அமைப்புச் செயலாளர் ப.சந்திரன், கவுரவ ஆலோசகர்கள் ராமலிங்கம், ஜெயப்பிரகாசம், ஜவஹர்அலி கூறியதாவது:மாநகராட்சியுடன் இணைந்த எங்கள் விரிவாக்கப் பகுதியில் (வார்டு 31,32) பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். வார்டு 31க்குட்பட்ட பகுதியில் 7 நாட்களுக்கு ஒருமுறைதான் வீடுகளின் குடிநீர் குழாய் இணைப்புகளில் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.வாரம் இருமுறை வினியோகிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வார்டு 32 பாரதிதாசன் தெருவில் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனு அளித்தும் பயனில்லை. வார்டு 31ல் நேதாஜி தெரு, மறைமலை அடிகள் கிழக்கு தெரு, கண்ணதாசன் தெரு, குமரன் தெரு, நக்கீரர் தெரு, கலைவாணர் தெருவில் தார்ச்சாலை அமைக்க வேண்டும்.வ.உ.சி., 3 வது கிழக்குத் தெருவில் 3 ஏக்கர் காலி இடம் உள்ளது. கருவேல மரங்களால் புதர்மண்டியுள்ளது. இங்கு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதை சீரமைத்து பூங்கா அமைக்க வேண்டும். மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ள, குழந்தைகள் விளையாட உதவியாக இருக்கும்.வார்டு 31ல் சேக்கிழார் தெரு, வார்டு 32ல் பாரதிதாசன் தெரு நுழைவுவாயிலில் மின்கம்பம், மின்விளக்கு இல்லை.

இரவில் வழிப்பறி நடக்கிறது. சிலர் மது அருந்தி தகராறு செய்கின்றனர். மின்வசதி இல்லாததால் இரவு நிகழ்வுகள் கண்காணிப்பு கேமராக்களில் தெளிவாக பதிவாவதில்லை. மின்வசதி செய்ய வேண்டும்.மேலமடை வண்டியூர் கண்மாயிலிருந்து மறுகால் செல்லும் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கால்வாய் சுருங்கிவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும். வாய்க்காலுக்கு கான்கிரீட் மூடி அமைத்து பாதுகாக்க வேண்டும். இதன்மூலம் வாய்க்காலில் குப்பைகள் குவிப்பது தடுக்கப்படும். கொசுத் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X