பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை பைபாஸ் ரோட்டை ஆக்கிரமித்துள்ள பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2019ல் துவங்கிய பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி முடிந்து திறக்கப்படவுள்ளது. இங்கிருந்து மாற்றப்பட்டு எல்லீஸ் நகர், பைபாஸ் ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ள தற்காலிக கடைகளை விரைவில் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.444 கடைகளுக்கு இடஒதுக்கீடுமதுரை பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்
 மதுரை பைபாஸ் ரோட்டை ஆக்கிரமித்துள்ள பெரியார் பஸ் ஸ்டாண்ட் கடைகள்

மதுரை : மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2019ல் துவங்கிய பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி முடிந்து திறக்கப்படவுள்ளது.

இங்கிருந்து மாற்றப்பட்டு எல்லீஸ் நகர், பைபாஸ் ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ள தற்காலிக கடைகளை விரைவில் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.444 கடைகளுக்கு இடஒதுக்கீடுமதுரை பெரியார், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டில் 2019 ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு பணிகள் துவங்கிய போது அங்கிருந்த 444 கடைகளுக்கு எல்லீஸ் நகர், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டது.பணிகள்முடிந்த பின் பஸ் ஸ்டாண்டில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். மாற்று இடத்தில் கடை நடத்தும் போது நியாயமான வாடகை நிர்ணயிக்கப்படும் என அன்று மாநகராட்சி தெரிவித்தது.கடைகள் ஒதுக்கீடு எப்போதுஇத்திட்டத்தில் குன்னத்துார் சத்திர கட்டுமான பணிகள் முடிந்து 191 கடைகள் கட்டப்பட்டுள்ளது. புது மண்டப கடைகள் அங்கு செயல்பட செப்.,22ல் ஏலம் நடக்கிறது. அதே போல் பெரியார் பஸ் ஸ்டாண்ட் கீழ் தளத்தில் 250, தரை தளத்தில் 51, 1வது தளத்தில் 55, 2வது தளத்தில் 55, 3வது, 4வது தளத்தில் தலா 9 கடைகள் என மொத்தம் 429 கடைகள் அமைகின்றன. பஸ் ஸ்டாண்ட் பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என ஆக., 26ல் மாநகராட்சி அறிவித்தது.

அதன்படி பஸ் ஸ்டாண்ட் திறக்க இன்னும் 9 நாட்களே உள்ளதால் பஸ் ஸ்டாண்டில் கடைகளுக்கு இடஒதுக்கீடு செய்வது எப்போது என வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பைபாஸ் ரோடு ஆக்கிரமிப்புதற்காலிக கடைகளாலும், பிளாட்பார கடைகளாலும், நடமாடும் கடைகளாலும் பைபாஸ் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்து நடக்கிறது. பெரியார் பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிந்த நிலையில் விரைவில் கடைகளை அங்கு மாற்ற வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்நீதிமன்ற உத்தரவு என்ன சொல்கிறதுமதுரை பாரதியார் வணிக வளாகம் (ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்), பெரியார் பஸ் ஸ்டாண்ட் பல்பொருள் வணிகர்கள் முன்னேற்ற சங்க செயலாளர் கருப்பாண்டி, ஒருங்கிணைந்த வியாபாரிகள் நலச்சங்கத்தலைவர் ராஜாராம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2018ல், சங்க உறுப்பினர்களுக்கு மாற்று இடம் ஒதுக்காமல் கடைகளை காலி செய்ய தடை விதிக்க வேண்டும் என மனு செய்தனர். அந்தாண்டு டிச.,ல் விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன் (தற்போது பணி ஓய்வு), பி.டி.ஆதிகேசவலு அமர்வு, பஸ் ஸ்டாண்டுகளின் கட்டுமானப் பணியை 18 மாதங்களில் முடிக்க வேண்டும்.

பஸ் ஸ்டாண்ட் கடைக்காரர்களுக்கு நகரில் தகுந்த இடங்களை அடையாளம் கண்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கட்டுமானம் முடிந்தபின் ஏற்கனவே அங்கு கடைகள் நடத்தியவர்களுக்கு டெண்டர் இன்றி கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிந்த பின் அங்கு ஏற்கனவே செயல்பட்ட அனைத்து கடைகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இடம் ஒதுக்கப்படும்' என்றனர். கலெக்டர், கமிஷனருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு2020 டிச.,ல் மதுரை அம்பல காரன்பட்டி சர்க்கரை முகமது தாக்கல் செய்த பொதுநல மனுவில், பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணியை விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன் (தற்போது பணி ஓய்வு) பி.புகழேந்தி அமர்வு விசாரித்து, 2021 மார்ச் 31க்குள் பணியை முடிக்க உத்தரவிட்டது. ஆனால் இன்னும் பணிகள் இழுத்துக்கொண்ட செல்கிறது.இதுகுறித்து சர்க்கரை முகமது தரப்பு வழக்கறிஞர் அழகுமணி கூறியதாவது: நீதிமன்ற உத்தரவை அரசு தரப்பில் நிறைவேற்றவில்லை. ஸ்மார்ட் சிட்டி பணியை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X