சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடும் ரயிலில் பெண்களிடம் 15 சவரன் நகை கொள்ளை

Added : செப் 15, 2021
Share
Advertisement
சேலம்:நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில், மூன்று பெண்களிடம், 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக, சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 55; மகள் அஞ்சலி, 19. இவர்கள் டில்லியில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்று, நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 12ம் தேதி கேரளாவுக்கு திரும்பினர். அதே ரயிலில் கோவையைச்

சேலம்:நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில், மூன்று பெண்களிடம், 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக, சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 55; மகள் அஞ்சலி, 19. இவர்கள் டில்லியில் நடந்த உறவினர் திருமணத்தில் பங்கேற்று, நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 12ம் தேதி கேரளாவுக்கு திரும்பினர். அதே ரயிலில் கோவையைச் சேர்ந்த கவுசல்யா, 29 என்பவரும் பயணித்தார். கடந்த 13ம் தேதி காலை, 7:10 மணிக்கு ரயில் திருவனந்தபுரம் வந்த நிலையில், பெட்டியில் மூன்று பேரும் மயங்கி கிடந்தனர். அவர்களை ரயில்வே போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

மயக்கம் தெளிந்த அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மூன்று பேரும் சேலத்தில் இரவு உணவு வாங்கி உள்ளனர். பெட்டியில் வைத்து, கழிப்பறைக்கு சென்று திரும்பி, உணவை சாப்பிட்டுள்ளனர்.சிறிது நேரத்தில் மயங்கி விட்டதாகவும், அப்போது விஜயலட்சுமி, அஞ்சலியிடம் இருந்து, 15 சவரன் நகை, கவுசல்யாவிடம் இருந்து மொபைல் போன் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.

திருவனந்தபுரம் ரயில்வே போலீசாரின் விசாரணையில், உணவில் மயக்க மருந்து கொடுத்து, கொள்ளையை அரங்கேற்றியது உத்தர பிரதேசத்தை சேர்ந்த அக்ஷர் பக்கேஷ், 35 என தெரிந்தது. அவர் சேலம், ஈரோட்டில் முகாமிட்டு இருக்கலாம் என திருவனந்தபுரம் ரயில்வே போலீசார், சேலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்படி, தேடுதல் வேட்டை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X