குழந்தை விற்பனை வழக்கு காப்பக நிர்வாகி ஜாமின் தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குழந்தை விற்பனை வழக்கு காப்பக நிர்வாகி ஜாமின் தள்ளுபடி

Added : செப் 15, 2021
Share
மதுரை : மதுரை இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்த மேலுார் சேக்கிபட்டி ஐஸ்வர்யாவின்ஒரு வயது குழந்தை, பெங்களூரு ஸ்ரீதேவியின் 2 வயது மகள் கொரோனாவால் இறந்ததாகக்கூறி பணத்திற்காக 2 தம்பதியருக்கு விற்பனை செய்யப்பட்டனர். .இல்லம் நிறுவனர் சிவக்குமார், ஊழியர் மாதர்ஷா, குழந்தையை தத்தெடுத்த இஸ்மாயில்புரம் கண்ணன், சக்கிமங்கலம் சகுபர் சாதிக், அவரது மனைவி

மதுரை : மதுரை இதயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம் புகுந்த மேலுார் சேக்கிபட்டி ஐஸ்வர்யாவின்ஒரு வயது குழந்தை, பெங்களூரு ஸ்ரீதேவியின் 2 வயது மகள் கொரோனாவால் இறந்ததாகக்கூறி பணத்திற்காக 2 தம்பதியருக்கு விற்பனை செய்யப்பட்டனர். .
இல்லம் நிறுவனர் சிவக்குமார், ஊழியர் மாதர்ஷா, குழந்தையை தத்தெடுத்த இஸ்மாயில்புரம் கண்ணன், சக்கிமங்கலம் சகுபர் சாதிக், அவரது மனைவி அனிஷ் ராணி, குழந்தையை விற்க உதவிய மதுரை ராஜா, செல்வி உள்பட சிலரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.சகுபர் சாதிக், அனிஷ் ராணி, இல்லத்தில் ஆசிரியராக பணிபுரிந்த கலைவாணி உட்பட சிலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனை ஜாமின் அனுமதித்தது. சிவக்குமார் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி தள்ளுபடி செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X