தமிழ்நாடு

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பெண்கள் இரண்டு ஆண்டுகளாக தொடரும் அலைகழிப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளாக காத்திருப்பதாகவும், அலைகழிக்கப்படுவதாகவும் புலம்புகின்றனர்.தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் திருமண உதவி திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு பணம் மட்டும் வழங்கப்பட்ட நிலையில் 2011 முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்ததை துவக்கி

அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளாக காத்திருப்பதாகவும், அலைகழிக்கப்படுவதாகவும் புலம்புகின்றனர்.

தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் திருமண உதவி திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு பணம் மட்டும் வழங்கப்பட்ட நிலையில் 2011 முதல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்ததை துவக்கி வைத்தார். உயர் கல்வி பயின்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், இதனுடன் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. 2016ல் 8 கிராம் தங்கமாக உயர்த்தப்பட்டது. இத்திட்டம் மூலம் ஏழை பெண்கள் பயன் பெற்று வந்த நிலையில் தற்போது 2 ஆண்டுகள் ஆகியும் விண்ணப்பம் செய்த பயனாளிகளுக்கு பணம், நகை வழங்கப்படவில்லை.

தினமும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி பயனாளிகளை அலுவலர்கள் அலைக்கழிக்கின்றனர். பயனாளிகளில் பட்டதாரி விண்ணப்பதாரர்களுக்கு ஒரு ரேட், உயர் கல்வி படித்தவர்களுக்கு ஒரு ரேட் வாங்குவதாகவும் மக்கள் புலம்புகின்றனர். ஏழை பெண்கள் கஷ்டத்தை உணர்ந்து தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதையும் நிதி வரவில்லை என்ற காரணம் காட்டி வருடக் கணக்கில் இழுத்தடிப்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அரசு விரைவில் நிதி ஒதுக்கி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலைந்தது தான் மிச்சம்நான் என் மகளுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் கொடுத்து ஒரு வருடம் ஆக போகிறது. அலுவலகத்திற்கு நாங்க அலைந்தது தான் மிச்சம். தினமும் ஒரு காரணம் சொல்லி எங்கள் அனுப்புகின்றனர். பஸ்சிற்கும், ஆவணங்களை ஜெராக்ஸ் எடுப்பதற்கும் செலவழித்தது தான் மிச்சம். பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை.ரேவதி, குடும்பதலைவி, அருப்புக்கோட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X