கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குற்றங்களில் ஈடுபடமாட்டோம் உத்தரவாதம் கோரும் உயர்நீதிமன்றம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
மதுரை : மது அருந்திய தகராறில் கைதான 2 பேர் இனி குற்றங்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு உள்ளூர் பிரமுகர்கள் அல்லது வி.ஏ.ஓ.,தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்தால் ஜாமின் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திருச்சி ஸ்ரீரங்கம் சிவா, மேலக்கொண்டையம்பேட்டை கார்த்திக். இவர்கள் நண்பர்கள் சிலருடன் மது அருந்தியபோது பிரச்னை

மதுரை : மது அருந்திய தகராறில் கைதான 2 பேர் இனி குற்றங்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு உள்ளூர் பிரமுகர்கள் அல்லது வி.ஏ.ஓ.,தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்தால் ஜாமின் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் சிவா, மேலக்கொண்டையம்பேட்டை கார்த்திக். இவர்கள் நண்பர்கள் சிலருடன் மது அருந்தியபோது பிரச்னை ஏற்பட்டது. பீர் பாட்டிலால் குத்தியதில் சுரேஷ் என்பவர் காயமடைந்தார். ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிந்தனர். ஜாமின் அனுமதிக்க சிவா, கார்த்திக் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.ஏற்கனவே விசாரணையின் போது அரசுத் தரப்பில், 'மனுதாரர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஜாமின் அனுமதிக்கக்கூடாது,' என ஆட்சேபம் தெரிவித்தது. நீதிபதி: வரும்காலங்களில் மது அருந்த மாட்டோம்; குற்றங்களில் ஈடுபடமாட்டோம் என மனுதாரர்கள் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.நேற்று நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் இனி குற்றங்களில் ஈடுபடமாட் டோம் என உத்தரவாதம் தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதி: மனுதாரர்கள் இனி குற்றங்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு உள்ளூர் பிரமுகர்கள் அல்லது வி.ஏ.ஓ.,தரப்பில் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது ஜாமின் குறித்து பரிசீலிக்கப்படும். விசாரணை அடுத்தவாரம் ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X