பொது செய்தி

தமிழ்நாடு

விருந்தாளிகளாகும் விஷப்பூச்சிகள்; சிதைந்த சாக்கடைகள் பரிதவிப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் குடியிருப்போர்

Added : செப் 15, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வரும் சூழலில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் குடியிருப்பு மக்கள்.கோவிந்தன் நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் சவுந்தரபாண்டியன், செயலாளர் அசோக்குமார், பொருளாளர் ராஜூ, துணை தலைவர் ராஜா, இணைச் செயலாளர் கணேசன் கூறியதாவது: கோவிந்தன் நகரில்

ஸ்ரீவில்லிபுத்துார் : நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வரும் சூழலில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன் நகர் குடியிருப்பு மக்கள்.

கோவிந்தன் நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் சவுந்தரபாண்டியன், செயலாளர் அசோக்குமார், பொருளாளர் ராஜூ, துணை தலைவர் ராஜா, இணைச் செயலாளர் கணேசன் கூறியதாவது: கோவிந்தன் நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கழிவுநீர் சாக்கடைகள் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது பல இடங்களில் சிதைந்து காணப்படுவதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கொசு தொல்லையை ஏற்படுத்துகிறது.புதிதாக வீடுகள் கட்டப்பட்ட பகுதிகளில் முறையாக ரோடு அமைக்காமல் மண் தரையாக உள்ளது.

இதனால் மழைக்காலத்தில் சகதி ஏற்பட்டு நடந்து செல்பவர்கள், டூவீலரில் செல்பவர்கள் தவிக்கும் நிலை உள்ளது.இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இருக்கும் நிலையில் அனைத்து பஸ்களும் நிற்பதில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதற்கு கூட ஆட்டோக்களை நம்பி காத்திருக்க வேண்டியுள்ளது.தற்போது சர்ச் சந்திப்பில் ரோடு விரிவாக்கம் பணி நடப்பதால் கோவிந்தன்நகர் வழியாக அனைத்து பஸ்களும் செல்வதால் இங்குள்ள ரோடு பாதிப்படைந்து வருகிறது.

மேலும் குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது.சுகாதார வளாகம் முன்பு முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டியுள்ளது. லைலாப்பேரி கண்மாய் கரையில் செடிகள் வளர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. மேலும் விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் அடிக்கடி வருகின்றன. இதனால் குடியிருப்பவர்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.குடியிருப்புகள் அதிகரித்துவரும் தெருக்களில் கூடுதல் சின்டெக்ஸ் தொட்டிகள், தெருவிளக்குகள், சாக்கடைகள் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X