இந்தியா

வண்ண மீன்கள் வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில், கொல்லைப்புறத்தில் அலங்கார வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.ஆலங்குப்பம் ,சஞ்சீவி நகர் கிராம சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முகமையின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கோவிந்தசாமி வரவேற்றார்.மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள்,

புதுச்சேரி : மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில், கொல்லைப்புறத்தில் அலங்கார வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

ஆலங்குப்பம் ,சஞ்சீவி நகர் கிராம சமுதாயக் கூடத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முகமையின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கோவிந்தசாமி வரவேற்றார்.மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள், மத்திய அரசின் பி.எம்.எம்.எஸ்.ஒய். திட்டத்தின்கீழ், பெண்கள் கொல்லைப்புற வண்ண மீன் வளர்ப்பில் ஈடுபட்டு குடும்ப வருமானத்தை பெருக்குவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கடல் உயிரின ஆராய்ச்சி மையத்தின் துணை பேராசிரியர் ராமமூர்த்தி, வண்ண மீன் வளர்ப்பு குறித்து விளக்கம் அளித்தார்.அதில், சிமென்ட் தொட்டிகள் அமைத்தல், அதில் வண்ண மீன் வளர்த்தல், தீவனமுறைகள். மீன்களை விற்பனை செய்வது குறித்து மகளிருக்கு பயிற்சி அளித்தார். மீன்வள விரிவாக்க அதிகாரி பாலமுரளி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X