பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள பகுதிகள் அறிவிப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் 2019ல் நடந்த ஊரக தேர்தலின் போது நிரப்பப்படாத பதவியிடங்கள், ஜூன் 2021 வரை காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர் 1, ஒன்றிய கவுன்சிலர் 3, ஊராட்சி தலைவர்கள் 4, வார்டு உறுப்பினர்கள் 46 என 54 பதவியிடங்களுக்கு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்க உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் 2019ல் நடந்த ஊரக தேர்தலின் போது நிரப்பப்படாத பதவியிடங்கள், ஜூன் 2021 வரை காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர் 1, ஒன்றிய கவுன்சிலர் 3, ஊராட்சி தலைவர்கள் 4, வார்டு உறுப்பினர்கள் 46 என 54 பதவியிடங்களுக்கு 188 ஓட்டுச்சாவடிகளில் அக். 9ல் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக இன்று (செப். 15) முதல் வேட்புமனுக்கள் பெறப்பட உள்ளன. செப். 22 கடைசி நாள். செப். 25ல் வாபஸ் பெறலாம்.

அக். 12ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.இதற்காக மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள ஊராட்சி பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.சாத்துார், ராஜபாளையம், விருதுநகர் ஒன்றிய பகுதிகள் முழுமைக்கும், அருப்புக்கோட்டை ஒன்றியம் வில்லிபத்திரி, மலைப்பட்டி, வேலாயுதபுரம், காரியாபட்டி ஒன்றியம் அழகியநல்லுார், கிழவனேரி, தண்டியேந்தல், அரசகுளம், வக்கணாங்குண்டு, வலுக்கலொட்டி, நரிக்குடி ஒன்றியம் உளுத்திமடை, என்.முக்குளம், ஆணைக்குளம், ஆண்டியேந்தல், எழுவணி, திருவளர்நல்லுார், மறையூர், அ.முக்குளம், சாத்துார் கோசுக்குண்டு, சிவகாசி ஒன்றியம் சாமிநத்தம், சித்துராஜபுரம், விஸ்வநத்தம்,

காளையார்குறிச்சி, கிருஷ்ணபேரி, கிச்சநாயக்கன்பட்டி, திருச்சுழி ஒன்றியம் பூலாங்கல், ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றியம் கரிசல்குளம், கொத்தன்குளம், கோட்டைப்பட்டி, டி.மானகசேரி, வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.டி.,ரெட்டியபட்டி, வெற்றிலையூரணி, குண்டாயிருப்பு, கோட்டைப்பட்டி, வத்திராயிருப்பு ஒன்றியம் இலந்தைகுளம், ரெங்கப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்படும்.

இத்தேர்தலில் 43,379 ஆண் வாக்காளர்கள், 46,302 பெண் வாக்காளர்கள், 10 இதரர்கள் என 89,691 பேர் ஓட்டளிக்க உள்ளனர். 14 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 46 உதவி அலுவலர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 04562 252013 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X