இந்தியா

நிதி நிறுவனத்தில் ரூ.10.80 லட்சம் கொள்ளை

Added : செப் 15, 2021
Share
Advertisement
வில்லியனுார் : கரிக்கலாம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து, ரூ.10.80 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.புதுச்சேரி அடுத்த கரிக்கலாம்பாக்கம், மடுகரை மெயின் ரோடு பகுதியில், பெல் ஸ்டோர் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ஜெயபிரபா, 34, மேலாளராக உள்ளார். துணை மேலாளர் சியாமளா உள்ளிட்ட எட்டு பேர் வேலை செய்து

வில்லியனுார் : கரிக்கலாம்பாக்கத்தில் இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து, ரூ.10.80 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

புதுச்சேரி அடுத்த கரிக்கலாம்பாக்கம், மடுகரை மெயின் ரோடு பகுதியில், பெல் ஸ்டோர் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ஜெயபிரபா, 34, மேலாளராக உள்ளார். துணை மேலாளர் சியாமளா உள்ளிட்ட எட்டு பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிறுவனம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வட்டிக்கு கடன் வழங்கி வருகிறது. கடன் தொகையை வசூலித்து சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

மேலாளர் ஜெயப்பிரபா, கடந்த 8ம் தேதியிலிருந்து ஐந்து நாட்கள் விடுமுறையில் சென்றார். துணை மேலாளர் சியாமளா அலுவலக பொறுப்பை கவனித்து வந்தார்.கடந்த 9ம் தேதி மற்றும் 11ம் தேதி வசூலான ரூ.10.80 லட்சத்தை, வழக்கம்போல் லாக்கரில் வைத்து, அதனை இரும்பு பீரோவிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றனர். வார விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். துப்புரவு பணியாளர் ஏம்பலத்தை சேர்ந்த சத்யா, அலுவலக மெயின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து, துணை மேலாளர் சியாமளாவிற்கு தகவல் தெரிவித்தார்.

அலுவலகத்திற்கு வந்த துணை மேலாளர் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, இரும்பு பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.அதில் பணம் வைத்திருந்த லாக்கர் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது.தகவலறிந்து வந்த மேலாளர் ஜெயபிரபா, கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, தயாளன் ஆகியோர் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X