இந்தியா

ரேஷன் கடைகளை திறக்கக் கோரி ஜனநாயக மாதர் சங்கம் போராட்டம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர்.ராஜா தியேட்டர் அருகிலிருந்து ஊர்வலமாக சென்று, மிஷன் வீதி மாதா கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பிரதேச செயலாளர் சத்யா தலைமை தாங்கினார். அகில இந்திய துணை தலைவர் சுதா, பிரதேச துணை தலைவர் இளவரசி, பாகூர் கமிட்டி உறுப்பினர்

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர்.

ராஜா தியேட்டர் அருகிலிருந்து ஊர்வலமாக சென்று, மிஷன் வீதி மாதா கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பிரதேச செயலாளர் சத்யா தலைமை தாங்கினார். அகில இந்திய துணை தலைவர் சுதா, பிரதேச துணை தலைவர் இளவரசி, பாகூர் கமிட்டி உறுப்பினர் சிவகாமி ஆகியோர் பேசினர்.

நுாறு நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறங்களில் விரிவுபடுத்த வேண்டும். இதற்கான கூலியை 600 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை உடனடியாக திறந்து, இலவச அரிசி வழங்க வேண்டும். மத்திய அரசு சமையல் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X