பல்லாங்குழி தேசிய நெடுஞ்சாலை; உயரமில்லா தடுப்புச்சுவர்கள் விபத்துக்களால் அவதிப்படும் ஸ்ரீவி., பொதுமக்கள்.| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பல்லாங்குழி தேசிய நெடுஞ்சாலை; உயரமில்லா தடுப்புச்சுவர்கள் விபத்துக்களால் அவதிப்படும் ஸ்ரீவி., பொதுமக்கள்.

Added : செப் 15, 2021
Share
ஸ்ரீவில்லிபுத்துார் : உயரம், அகலமில்லாத தடுப்புச்சுவர்கள், ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறும் ரோடு, ரோட்டோரம் மணல்குவியல் போன்ற காரணங்களால் விபத்தில் சிக்கி வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்கள்.நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் மதுரை --- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஆங்காங்கே ஜல்லிக் கற்கள்

ஸ்ரீவில்லிபுத்துார் : உயரம், அகலமில்லாத தடுப்புச்சுவர்கள், ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறும் ரோடு, ரோட்டோரம் மணல்குவியல் போன்ற காரணங்களால் விபத்தில் சிக்கி வருகின்றனர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பொதுமக்கள்.நகரின் மையப்பகுதி வழியாக செல்லும் மதுரை --- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ரோடு போடப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயர்ந்து ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ராமகிருஷ்ணாபுரத்தில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை உள்ள ரோட்டிலும் இது போன்ற குழிகள் அதிகரித்துள்ளதால் இரவில் வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நான்கு அடி வரை மணல் மேவி காணப்படுவதால் டூவீலர்களில் வரும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.கூட்டுறவு மில் பாலத்தில் தடுப்பு சுவர் உயரமில்லாமல் காணப்படுகிறது.பூவாணி விலக்கு பாலம் அகலம் இல்லாததால் இரவில் வரும் வெளியூர் கனரக வாகனங்கள் மோதி கவிழ்ந்து விடுகிறது. இதனால் அடிக்கடி பாலத்தின் தடுப்பு சுவர்கள் உடைந்து விடுகிறது.இவ்வாறு பல்வேறு சிரமங்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X