இந்தியா

விநாயகர் சிலைகள் விஜர்சனம்

Added : செப் 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, புதுச்சேரி நகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கடலில் விஜர்சனம் செய்யப் பட்டது.புதுச்சேரி இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு. கடந்த 10ம் தேதி, சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர்

புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, புதுச்சேரி நகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கடலில் விஜர்சனம் செய்யப் பட்டது.

புதுச்சேரி இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு. கடந்த 10ம் தேதி, சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது.இங்கு தினம் சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. நேற்று மதியம் 1.30 மணியளவில், விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் துவங்கியது. சாரம் அவ்வை திடலில் இருந்து புறப்பட்டு, ராஜா தியேட்டர் சந்திப்பிற்கு வந்தடைந்தன.

முத்தியால்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த சிலைகள் அண்ணா சாலை வழியாக வந்தடைந்தன. அங்கு சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.அங்கிருந்து ஊர்வலமாக சிலைகள் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலை 4.௦௦ மணி முதல் 5.௦௦ வரை, பழைய நீதிமன்றம் எதிரே கடலில் கரைக்கப் பட்டது.தமிழக இந்து முன்னணி இணை அமைப்பாளர் ராஜேஷ் சிறப்புரையாற்றினார். விழா பேரவை தலைவர் குமரகுரு தலைமை தாங்கினார்.

சபாநாயகர் செல்வம், பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன், புதுச்சேரி மாநில இந்து முன்னணி தலைவர் சனில்குமார், கோட்ட செயலர் முருகையன், துணைத் தலைவர் மதிவாணன், மாநில செயலர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கொரோனா தொற்று காரணமாக 70 சிலைகள் மட்டுமே நேற்று கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X