இந்தியா

தனியார் நிறுவனத்தை கண்டித்து பெண்கள் மறியல்; வசூலித்த பணத்தை திருப்பித் தர வலியுறுத்தல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தனியார் நிறுவனத்தில்,பார் கோடு எழுத்துப் பணியில் சேர்ந்த கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்கள், தங்களிடம் வசூலித்த பணத்தை திருப்பித் தரக் கோரி,சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, பஸ் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சாலையில், வாடகை கட்டடத்தில் 'ஹன்ச் அவுட் சோர்சிங்' என்ற நிறுவனம் இயங்கி
 தனியார் நிறுவனத்தை கண்டித்து பெண்கள் மறியல்; வசூலித்த பணத்தை திருப்பித் தர வலியுறுத்தல்

புதுச்சேரி : தனியார் நிறுவனத்தில்,பார் கோடு எழுத்துப் பணியில் சேர்ந்த கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்கள், தங்களிடம் வசூலித்த பணத்தை திருப்பித் தரக் கோரி,சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி, பஸ் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சாலையில், வாடகை கட்டடத்தில் 'ஹன்ச் அவுட் சோர்சிங்' என்ற நிறுவனம் இயங்கி வருகிறது.இந்நிறுவனம், 'வீட்டில் இருந்து வேலை, பார்கோடு தயாரிக்க எண்கள் எழுதிக் கொடுத்தால், வாரத்திற்கு ரூ.3,150 வீதம் மாதம் ரூ.12,600 சம்பாதிக்கலாம்' என விளம்பரப்படுத்தியது.

கொரோனா காரணமாக வேலையின்றி வீட்டில் இருந்த பெண்கள், கல்லுாரி மாணவிகள் பலர் இப்பணியில் சேர்ந்தனர்.அவர்களிடம், இப்பணிக்கான பொருட்களுக்கு ரூ.2,100; தனி செயலிக்கு ரூ.100; உறுப்பினர் அட்டைக்கு ரூ.600 என மொத்தம் ரூ.2,800 முன் பணமாக வசூலிக்கப்பட்டது. புதிய உறுப்பினரை சேர்த்து விட்டால், நபர் ஒருவருக்கு ரூ.600 வழங்கப்பட்டது.

பணியில் சேர்ந்தவர்களுக்கு வாரத்திற்கான ஒர்க் ஷீட், எழுத வேண்டிய சீரியல் எண் பட்டியல் வழங்கப்பட்டது. இந்த பட்டியலில் உள்ள நான்கு இலக்க எண்களை ஒர்க் ஷீட்டில் உள்ள சிறு கட்டத்தில் வரிசைப்படி எழுத வேண்டும்.ஒரு பக்கத்திற்கு 500 எண், பின் பகுதியில் 500 எண் எழுத வேண்டும். 90 ஒர்க் ஷீட்டை, பிழையின்றி, அடித்தல் திருத்தல் இன்றி, கட்டத்தில் இடிக்காமல் எழுத வேண்டும்.

எழுதிய ஒர்க் ஷீட்களை, வாரத்திற்கு ஒரு முறை அலுவலகத்தில் ஒப்படைத்தால், ரூ.3,150 வழங்கப்படும் என கூறினர்.ஆனால், வாரத்திற்கு அதிகபட்சமாக 10 முதல் 20 ஒர்க் ஷீட் மட்டுமே எழுத முடிந்தது. இதற்கு ரூ.100 முதல் 200 மட்டுமேசம்பளமாக வழங்கினர்.இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள், தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப கேட்டு, பிரச்னை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று பகல் 12:00 மணி அளவில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், தாங்கள் கட்டிய முன் பணத்தை கேட்டு, அந்நிறுவனத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.உருளையன்பேட்டை போலீசார், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், நிறுவனத்தில் இருந்த மேலாளர் கோபிநாத்தை விசாரணைக்காக, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், தாங்கள் செலுத்திய பணத்தை உடனடியாக மீட்டு தரக்கோரி மறியலை தொடர்ந்தனர்.அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., ரட்சனா சிங், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அதனையேற்று பெண்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, புகார் கொடுத்தனர்.அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.நிறுவனத்தின் உரிமையாளர், திருச்சியை சேர்ந்த தீபக்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X