ரூ.30 லட்சத்திற்கு விற்கப்பட்ட நீட் வினாத்தாள்: மாணவி உட்பட 8 பேர் கைது

Updated : செப் 15, 2021 | Added : செப் 15, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
ஜெய்பூர்: கடந்த 12-ம் தேதி நீட் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்பூரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு கண்காணிப்பாளர் வினாத்தாளை வாட்ஸ்அப் மூலம் வெளி ஆட்களுக்கு அனுப்பி விடைகளை பெற்று ஒரு மாணவிக்கு உதவியுள்ளார். இவ்விஷயம் வெளிச்சத்திற்கு வந்து தற்போது மாணவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தகுதியானவர்களை மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்
NEET exam,medical entrance test,Paper Leak,Cheating,நீட்

ஜெய்பூர்: கடந்த 12-ம் தேதி நீட் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்பூரில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு கண்காணிப்பாளர் வினாத்தாளை வாட்ஸ்அப் மூலம் வெளி ஆட்களுக்கு அனுப்பி விடைகளை பெற்று ஒரு மாணவிக்கு உதவியுள்ளார். இவ்விஷயம் வெளிச்சத்திற்கு வந்து தற்போது மாணவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகுதியானவர்களை மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கு அனுப்பவே நீட் மற்றும் ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அதில் பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு எப்படியாவது சீட் பெற்றுவிட துடிக்கும் நபர்கள் சிக்குகிறார்கள்.

தமிழகத்தில் மட்டும் 2019 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுத வைத்து மருத்துவ சீட் பெற்ற 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிக்கினர். அதிலும் சிலரது தந்தைகள் மருத்துவர்கள் என்பது தான் கேலிக்கூத்தானது. அதே போல் கடந்த ஆண்டு ஐ.ஐ.டி., சேர்க்கைக்கான ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வில் 99.8% மதிப்பெண் பெற்ற அசாம் மாணவர் ஆள்மாறாட்டம் மூலம் அம்மதிப்பெண் பெற்றது தெரியவந்து கைது செய்யப்பட்டார்.


latest tamil news



இந்நிலையில் இந்தாண்டு நீட் தேர்வில் மற்றொரு அதிர்ச்சி தரும் சம்பவம் ஜெய்பூரில் நடந்துள்ளது. அங்குள்ள ராஜஸ்தான் பொறியியல் கல்லூரி நீட் தேர்வு மையமாக உள்ளது. அத்தேர்வு மைய கண்காணிப்பாளர்களில் ஒருவரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர் தினேஷ்வரி குமாரி என்ற தேர்வருக்காக தங்களது மொபைல் போனில் வினாத்தாளை புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் உள்ள இருவருக்கு அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அதனை சிகார் பகுதியிலுள்ள சிலருக்கு அனுப்பி விடைகளை பெற்று மீண்டும் ராம் சிங்கிற்கு அனுப்பியுள்ளனர். அதனை கொண்டு அவர் சரியான விடைகளை தேர்வர் தினேஷ்வரி குமாரிக்கு வழங்கியுள்ளார். இத்தகவல் கசிந்து ஜெய்பூர் போலீசார் இம்மோசடியில் சம்பந்தப்பட்ட மாணவி உட்பட 8 பேரை கைது செய்தனர். இதில் நீட் கோச்சிங் சென்டர் ஒன்றும் இடைத்தரகராக செயல்பட்டுள்ளது.

இந்த பணியை முடித்துத் தர தேர்வு கண்காணிப்பாளருக்கு ரூ.30 லட்சம் பேரம் பேசியுள்ளனர். முதல் தவனையாக ரூ.10 லட்சத்துடன் மாணவியின் மாமா தேர்வு மையத்திற்கு வெளியே காத்திருந்துள்ளார். அவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் தேர்வெழுதிய மாணவர்களுக்கு அதிருப்தியை தந்துள்ளது. மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்துவிட்டதால் மறுதேர்வு நடக்க வாய்ப்பில்லை என்கின்றனர் கல்வியாளர்கள்.

மாணவர்களின் கம்மல், சங்கிலி, மெட்டியை கூட கழட்டி விட்டு தேர்வு எழுத அனுப்பும் நிலையில், கண்காணிப்பாளர்கள் செல்போன் வைத்துக்கொள்ள அனுமதித்தது யார்? அவர்களை சோதனை செய்ய, கண்காணிக்க தேசிய தேர்வு முகமை எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லையா? தேர்வு மையங்களில் ஜாமர்கள் பொருத்தப்படும் என அறிவித்த தேர்வு முகமை அதனை செய்யவில்லையா? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
18-செப்-202103:13:28 IST Report Abuse
மலரின் மகள் வேலி, பயிறு.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
15-செப்-202115:57:40 IST Report Abuse
THINAKAREN KARAMANI எவ்வளவு பேர்கள் கஷ்டப்பட்டு படித்து நீட் தேர்வுக்குத் தயாராகிறார்கள். அந்த ஒரு மாணவி மட்டும் நோகாமல் தேர்வாக வேண்டும் என்று நினைத்தால் எப்படி? சும்மா விடக்கூடாது. கண்டிப்பாக அந்த முழுக்கூட்டத்துக்கும் கடுமையான தண்டனையும் பெரிய தொகையாக அபராதமும் விதிக்கவேண்டும். அப்போதுதான் ஒரு பயம் இருக்கும்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
15-செப்-202115:04:38 IST Report Abuse
J. G. Muthuraj 'நீட்' முறை மருத்துவ கல்வி பணமயமாக்குதல் என்ற திட்டத்தின் கீழ் தனியார்வசம் விற்கப்படுத்துவிட்டதோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X