சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிடிவாரன்ட் குற்றவாளி விழுப்புரத்தில் கைது

Added : செப் 15, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன், 28; இவரை, கடந்த 2015ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, விழுப்புரம் டவுன் போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1ல் ஆஜர்படுத்தினர்.இவ்வழக்கு கடந்த மார்ச் 30ம் தேதி விசாரணைக்கு வந்த போது, முரளிதரன்

விழுப்புரம் : விழுப்புரத்தில், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன், 28; இவரை, கடந்த 2015ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, விழுப்புரம் டவுன் போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1ல் ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கு கடந்த மார்ச் 30ம் தேதி விசாரணைக்கு வந்த போது, முரளிதரன் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்த பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.போலீசார் அவரை தேடி வந்த நிலையில் நேற்று கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நின்றிருந்த முரளிதரனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X