ஓய்வூதியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்திட எம்.எல்.ஏ., கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்திட எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : செப் 15, 2021
Share
விருத்தாசலம் : 'மாஜி எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியத்தை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்' என விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த சட்டசபையில் அவர் பேசியதாவது: தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பெண்கள் அரசு கல்லுாரி, புறநகர் பஸ் நிலையம், அரசு மருத்துவமனையை
 ஓய்வூதியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்திட எம்.எல்.ஏ., கோரிக்கை

விருத்தாசலம் : 'மாஜி எம்.எல்.ஏ.,க்களின் ஓய்வூதியத்தை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்' என விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த சட்டசபையில் அவர் பேசியதாவது: தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பெண்கள் அரசு கல்லுாரி, புறநகர் பஸ் நிலையம், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர், வில்வனேஸ்வரர் கோவில்கள் இருப்பதால், சுற்றுலாத்தளமாக அமைக்க வேண்டும்.

செராமிக் தொழில்நுட்ப கல்லுாரியை மேம்படுத்த வேண்டும். வேப்பூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும். சேப்பாக்கம் கோமுகி ஆற்றின் குறுக்கே தடுப்பணை, வேப்பூரில் அரசு கல்லுாரி, போக்குவரத்துக் கழக பணிமனை, உழவர் சந்தை ஆகியவற்றை காமராஜர், கருணாநிதி பெயர்களில் துவங்க வேண்டும்.

1989ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் துவங்கப்பட்ட கற்குழாய் தொழிற்சாலையை மீண்டும் துவக்க வேண்டும். முந்திரி பழ சாற்றின் மூலம் பெயிண்ட் மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பதால், விவசாயிகளுக்கும், அரசுக்கும் வருமானம் கிடைக்கும். கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், ஆலடி ஊராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

ஆரூரான், பெண்ணாடம் அருணா சர்க்கரை ஆலைகளில் இருந்து விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகையை வேளாண் அமைச்சர் பெற்றுத் தர வேண்டும்.எம்.எல்.ஏ.,க்கள் ஆண்டு தொகுதி நிதி ரூ. 5 கோடியாக உயர்த்த வேண்டும். வரையறுத்த மற்றும் வரையறுக்கப்படாத நிதி என்பதை மாற்றி விருப்ப நிதியாக வழங்க வேண்டும். மாஜி எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வூதிய நிதியை ரூ. 20 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு சட்டசபையில் அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X