குடிநீர் பிரச்னையை கண்டித்து மறியல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கொண்டாரெட்டிப்பாளையம் கிராமத்தில் குடிநீர் மின்சாதனங்களை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் மறியல் செய்ய திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாகிராமம் ஒன்றியம், மாளிகைமேடு ஊராட்சி, கொண்டாரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள குடிநீர் மோட்டார் ஸ்டாட்டர் உள்ளிட்ட சாதனங்களை இதே பகுதியை சேர்ந்த சிலர் சேதப்படுத்தினர்.

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கொண்டாரெட்டிப்பாளையம் கிராமத்தில் குடிநீர் மின்சாதனங்களை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் மறியல் செய்ய திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாகிராமம் ஒன்றியம், மாளிகைமேடு ஊராட்சி, கொண்டாரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள குடிநீர் மோட்டார் ஸ்டாட்டர் உள்ளிட்ட சாதனங்களை இதே பகுதியை சேர்ந்த சிலர் சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் நேற்று குடிநீர் விநியோகம் பாதித்தது. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கொண்டாரெட்டிப் பாளையம் சாலையில் மறியல் செய்ய திரண்டனர். தகவலறிந்த ஊராட்சித் தலைவர் சுந்தர்ராமன் உள்ளிட்டோர் பொது மக்களிடம் பேசி, போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் காலை 6 மணி முதல் 8:00 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X