சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒறையூர் - கரும்பூர் சாலைக்கு வனத்துறை அனுமதி வழங்காததை கண்டித்து சாலை மறியல்

Added : செப் 15, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஒறையூர் - கரும்பூர் சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.பண்ருட்டி அடுத்த ஒறையூர்-கரும்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் மலட்டாற்றில் வனத்துறைக்கு சொந்தமாக 100 மீட்டர் சாலை உள்ளது. இந்த 100 மீட்டருக்கு தார் சாலை அமைக்க 10 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரிகள் அனுமதி

பண்ருட்டி : பண்ருட்டி அருகே ஒறையூர் - கரும்பூர் சாலை அமைக்க வனத்துறை அனுமதி வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

பண்ருட்டி அடுத்த ஒறையூர்-கரும்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் மலட்டாற்றில் வனத்துறைக்கு சொந்தமாக 100 மீட்டர் சாலை உள்ளது. இந்த 100 மீட்டருக்கு தார் சாலை அமைக்க 10 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காததால் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது.

நேற்று காலை 9:00 மணியளவில் கரும்பூர் தி.மு.க.,வை சேர்ந்த ராஜசேகர் தலைமையில் 40 பேர் 100 மீட்டர் சாலைக்கு வனத்துறை தடையில்லா சான்று வழங்கக் கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். வனத்துறை சரகரிடம் போலீசார் பேசினர்.

வனத்துறை சார்பில் 100 மீட்டர் தார் சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்க உறுதியளித்ததாக கூறினர். பின், காலை 10:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X