பொது செய்தி

தமிழ்நாடு

மண்பாண்ட தொழிலாளர்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு

Added : செப் 15, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மண்பாண்ட தொழிலாளர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் அருகே சாலைஅகரம் கிராமத்தில் சாலைேயாரம் வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் வீட்டின் பின்புறம் சூளை போட்டுள்ளனர். இதனால், வெளியேறும் புகை மூலம் இடையூறு ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.ஐகோர்ட்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மண்பாண்ட தொழிலாளர்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.

விழுப்புரம் அருகே சாலைஅகரம் கிராமத்தில் சாலைேயாரம் வசிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் வீட்டின் பின்புறம் சூளை போட்டுள்ளனர். இதனால், வெளியேறும் புகை மூலம் இடையூறு ஏற்படுவதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.ஐகோர்ட் உத்தரவின் பேரில் கோலியனுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், சாலை அகரம் கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.பின், உரிமம் இன்றி சூளை போட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சூளை போட மாற்று இடம் ஏற்பாடு செய்யும்படி தெரிவித்து நோட்டீஸ் வழங்கினர்.இதனை கண்டித்து, மண்பாண்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு நேற்று மதியம் 3:15 மணியளவில் விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.வளவனுார் போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமூக தீர்வு காண வழிவகை செய்யப்படும் என கூறியதைத் தொடர்ந்து போராட்ட முடிவை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X