கிரைம் செய்திகள்

Added : செப் 15, 2021
Share
Advertisement
மகள் மாயம்: தந்தை புகார்கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார், 46; இவரது, மகள் சுபாஷினி, 19; இவர், கடந்த 12ம் தேதி வீட்டில் இரவு துாங்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் காணவில்லை. புகாரின் பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப் பதிந்து, சுபாஷினியை தேடிவருகிறார்.பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது மந்தாரக்குப்பம்:

மகள் மாயம்: தந்தை புகார்

கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார், 46; இவரது, மகள் சுபாஷினி, 19; இவர், கடந்த 12ம் தேதி வீட்டில் இரவு துாங்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் காணவில்லை. புகாரின் பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப் பதிந்து, சுபாஷினியை தேடிவருகிறார்.

பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கடைவீதியை சேர்ந்தவர் நித்யா. 25; இவரது வீட்டின் அருகே உள்ள திருமண மண்டபத்தில் மேல் ஏறிய வாலிபர் நித்யாவிடம் சைகை காட்டி உன்னிடம் பேச வேண்டும் என்றார். நித்யா தனது சகோதரியிடம் தெரிவித்தார். அவரது சகோதரி சென்று பார்த்த போது திருமண மண்டபத்தின் மேல் இருந்த நபர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து கடைவீதியை சேர்ந்த நவீன்குமார், 26; என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

மனைவி இறப்பில் சந்தேகம்: கணவர் புகார்

வேப்பூர்: வேப்பூர் அடுத்த பா.கொத்தனுாரைச் சேர்ந்தவர்கள் முனியன், 33; அனிதா, 31; இவர்கள், கடந்தாண்டு சென்னையில் பதிவு திருமணம் செய்து, சென்னை ஒரகடத்தில் வசித்தனர். இந்நிலையில், அனிதாவின் அண்ணன் ஆனந்தவேல், பத்திரத்தில் கையெழுத்திட வேண்டுமென அனிதாவை பா.கொத்தனுாருக்கு வர கூறினார். தொடர்ந்து, 13ம் தேதி அனிதா பா.கொத்தனுாரிலுள்ள ஆனந்தவேல் வீட்டிற்கு வந்தார். பின், பகல் 2:00 மணியளவில் துாக்க மாத்திரை சாப்பிட்டு வீட்டில் இறந்து கிடந்தார். அவருக்கு இறுதி சடங்கு செய்து, சுடுகாட்டில் சடலத்தை எரித்தனர். தனது மனைவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அவரது கணவர் முனியன் கொடுத்த புகாரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் புதுக்குப்பம் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் மணவாளன், 25; இவர் அதேபகுதியைச் சேர்ந்த இளமைமணி மகள் அபர்ணாவை கடந்த 11 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் அபர்ணாவிற்கு குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் மணவாளன் அவரது மாமியார் ஸ்ரீதேவியிடம் தனது குழந்தையை பார்க்க வீட்டிற்கு வருமாறு கூறினார். அவர் வர மறுத்ததால், மணவாளன் அவரை திட்டி தாக்கினார். மேலும் வீட்டில் நின்ற கார் கண்ணாடியை உடைத்தார். அவரது மாமியார் ஸ்ரீதேவி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மணவாளனை கைது செய்தனர்

பெண்ணை வெட்டியவருக்கு வலை

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் கரும்பாயிரம் மனைவி மருதாயி, 52; இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு மருதாயி வீட்டில் துாங்கினார். அப்போது அங்கு வந்த லோகநாதன், கத்தியால் அவரது கன்னத்தில் வெட்டி கொலைமிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து லோகநாதனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X